Saturday, December 12, 2009

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 7 வேளாண் கடன் தள்ளுபடி:

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்?

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 2

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 3

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 4

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 5

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? - 6


இதைப்போன்ற ஒரு கேலிக்கூத்தான கொள்கையை lens வைத்துத் தேடினாலும் கிடைக்காது. பொதுவாகவே தனி மனித ஒழுக்கம் மக்களிடையே குறைந்து வரும் இக்காலத்தில், விவசாயிகளை மென்மேலும் ஒழுக்கம் தவறியவர்களாக மாற்றுவதற்கென்றே இந்த திட்டம் உள்ளது.

கடன் தள்ளுபடி என்பது தவிர்க்க முடியாத இயற்கை சீற்றங்கள் வரும் காலத்திலோ அல்லது வறட்சி காலத்திலோ செய்யப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இது தற்போது மக்களின் credit discipline ஐ கெடுக்க வந்த ஒன்று. உண்மையில் சத்தியம் தவறாதவர்களாக இருந்த விவசாயிகளை சீரழித்து குணக்கொலை செய்த ஒன்று.

இந்த தள்ளுபடியில் பலன் அடைபவர்கள் பெரும்பாலும் வசதி படைத்த பெரிய விவசாயிகள் மற்றும் விவசாயிகள் என்ற போர்வையில் உள்ள அரசியல்வாதிகளும் தான். கடனை ஒழுங்காகக் கட்டும் விவசாயிகளுக்கு எந்த ஊக்கமும் கிடையாது. Atleast ஒழுங்காகக் கட்டிய விவசாயிகளுக்கு அவர்கள் கட்டிய தொகை திரும்பச் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு செய்யாமல் இருப்பதால் ஒழுங்காக செலுத்தும் விவசாயிகள் கட்டாத விவசாயிகளின் பார்வையில் பிழைக்கத்தெரியாதவர்களாகவும் பைத்தியக்காரர்களாகவும் தென்படுகிறார்கள். இதுமட்டுமல்லாது பண நஷ்டமும் அடைகிறார்கள்.

இன்னொரு வேடிக்கை என்ன என்றால், பெரும்பாலும் கஷ்டப்படும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குத்தான் இந்தத் திட்டம் தேவை. ஆனால், பெரும்பாலும் அவர்களுக்கு கடனே கிடைப்பதில்லையே? பிறகு இந்த திட்டத்தால் இவர்களுக்கு என்ன பயன்? அது மட்டுமின்றி நீர்ப்பாசன வசதியையும் கருத்தில் கொள்ள வேண்டும். 10 ஏக்கர் மானாவாரி நிலம் வைத்துள்ள விவசாயியும் 3 ஏக்கர் இறவை வசதி உள்ள விவசாயியையும் ஒன்றாகக் கருத முடியாதல்லவா? கடன் தள்ளுபடித்திட்டதில் இதைக் கருத்தில் கொள்ள வேண்டாமா?

உதாரணமாக, விதர்பா பகுதியில் மானாவாரியாக (மழையை மட்டும் நம்பி) பயிர் செய்யும் 10 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிக்கு கடன் நிவாரணம் கடன் தள்ளுபடி மூலம் கிடைக்க வில்லை. ஆனால் மேற்கு மஹாராஷ்டிரத்தில் போர் மற்றும் கிணறு வசதி கொண்ட 3 ஏக்கர் திராட்சை பயிரிடும் ஒரு பணக்கார விவசாயிக்கு கடன் தள்ளுபடியில் நிவாரணம் கிடைத்தது. இவ்வகை முரண்பாடுகளை என்ன என்று கூறுவது?

படிக்காத விவசாயிகளை ஏமாற்றும் வங்கி அலுவலர்களும் நடைமுறையில் உண்டு. வாங்காத கடனுக்கு நோட்டீஸ் பெறும் விவசாயிகளும் உண்டு.

இவ்வகை குளறுபடியால் வேளாண் கடன் தள்ளுபடி உண்மையிலேயே தேவையான பலன் அளிக்கவில்லை. மேலும் விவசாயத்திற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் இதர விஷயங்களுக்குத் தேவையான முதலீடு குறைந்ததன் விளைவு (ஏற்கெனவே குறிஞ்சிப்பாடியார் கூறியது போல) கடன் தள்ளுபடியாக விடிகிறது. உதாரணமாக சென்ற வருடம் (தேர்தல் வருடம்) தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.70,000 கோடியை கட்டமைப்பு வசதிகளுக்காகப் பயன்படுத்தியிருந்தோமேயானல் நமக்கு நிரந்தர வசதி வாய்ப்புகளும் கிட்டியிருக்கும். மேலும் உற்பத்தியும் பெருகியிருக்கும். விவசாயிகளும் அரசாங்கத்திடம் உதவி கேட்டு பிச்சை எடுக்கும் நிலையும் வாராதிருந்திருக்கும்.
என்ன செய்வது? என் போன்றவர்கள் இது போல blog ல் புலம்ப மட்டுமே முடிகிறது. தேவையான அளவு policy makers ஐ sensitize செய்தும் அவர்களின் vested interestனால் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுத்த முடியவில்லையே?

அடுத்த பதிவில் வேளாண் காப்பீடுத் திட்டம் பற்றி என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

--

2 comments:

  1. //என் போன்றவர்கள் இது போல ப்லொக் ல் புலம்ப மட்டுமே முடிகிறது. //

    கடமையைச் செய்யுங்கள் என்றோ ஒரு நாள் நிச்சயம் பலன் கிடைக்கும்,

    ReplyDelete
  2. அன்புடையீர்,
    இந்திய திரு நாட்டை முன்னேற்ற வேண்டும் ,விவசாயம் செழித்தாலன்றி இது சாத்தியமில்லை , அதற்கு நதி நீர் இணைப்பே நல்ல வழி. நான் சற்று ஆழமாக சென்று மேற்சொன்ன அம்சங்க‌ளை சாத்தியமாக்க ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற பெயரில் ஒரு திட்டம் தீட்டி ஐம் டூயிங் மை பெஸ்ட். என் திட்டத்தின் சுருக்கத்தை படிக்க கீழ் காணும் லிங்கை க்ளிக் செய்யவும்


    http://kavithai07.blogspot.com/2009/10/blog-post_31.html

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்