Saturday, February 21, 2009

சர்வதேச நெல் ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள நெல் பற்றிய அனைத்து வீடியோ படங்களின் தொகுப்பு

நெற்பயிர் பற்றிய ஆராய்ச்சி, சமூக மற்றும் அனைத்து செய்திகள் பற்றிய சர்வதேச நெல் ஆராய்ச்சி கழகத்திலிருந்து(IRRI) வெளியிடபட்ட விடியோக்கள் அனைத்தையும் YouTubeல் தொகுத்து வெளியிட்டுள்ளது. அனைத்து நெல் விவசாயிகளும் இதை பார்த்து பல தகவல் தெரிந்து கொள்ளளாம்.

http://www.youtube.com/profile?user=irrivideo&view=videos


--

அறுவடையின் போது மழையில் நனைந்த நெல்லை காப்பது எப்படி?

குறுவை நெல் அறுவடையின் போது பெய்யும் மழையால் விவசாயிகள் அடையும் துயர் சொல்லி மாளாது.மிகுந்த உழைப்பு மற்றும் பொருட்செலவிற்கு பின் செழுமையான பயிரை வளர்த்து அதை அறுவடை செய்யும் நேரத்தில் வரும் மழையால் ஒட்டு மொத்த பயிரும் வீணாக போகும் வாய்ப்புண்டு. அப்போது பெய்யும் மழையின் விளைவாக நெல்லின் நீர் பிடிப்பு அதிகமாகி பூஞ்சானம் வளர்ச்சி,அஃபுலோடாக்சின்(aflotoxin),கெட்ட வாடை வருதல்,முளை விடுதல், நிறம் மாறுதல்,எடை குறைவு போன்ற எடை மற்றும் தர குறைவு ஏற்படும். மேலும் விவசாயிகளும் நெல்லை சிறிது நாட்களுக்கு சேமித்து வைத்து விலை அதிகமாகி விற்கவும் முடியாமல் செய்து விடும் .

இதை எவ்வாறு கட்டு படுத்துவது?

100 கிலோ பாதிக்க பட்ட நெல்லில் 10 கிலோ உமி/தவிடு(ஹல்லர் பிரான் அல்லது ஹஸ்க்) மற்றும் 5 கிலோ உப்பு சேர்த்து குவியலாக்கி 8- 10 நாட்கள் வைக்கவும். அவ்வாறு வைத்திருக்கும் போது என்றாவது வெயில் அடித்தால், வெயிலில் காய வைக்கவும். அவ்வாறு பதபடுத்த பட்ட நெல்லை ஆஸ்பிரேட்டரில்(அனைத்து அரிசி மில்லிலும் (காத்து பேட்டை) இது இருக்கும்) விட்டு உமி மற்றும் தவிடை பிரித்து விட வேண்டும். அந்த உமி/தவிட்டை கால்நடைகளும் விரும்பி உண்ணும்.

இவ்வாறு செய்வதனால் நெல்லின் நீர் பிடிப்பு 28%லிருந்து 15% ஆக ஒரே நாளில் குறைந்து விடுகிறது. இதற்கு ஆகும் செலவும் மிக குறைவே(Rs40).இது சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்காத தொழில் நுட்பம் ஆகும்.இதை ஆய்வு முறையில் நாங்கள் செய்து பார்த்து பயனையும் உணர்ந்துள்ளோம். நெல்லில் சேமிப்பு மற்றும் அறுவடைக்கு பிந்தய தொழில் நுட்பம் பற்றி நடைமுறை அனுபவம் பெற விரும்பினால் உங்களது மின்னஞ்ஞலை தெரிவித்தால் உங்களுக்கு contact information தர தயாராக உள்ளோம்.

--

Sunday, February 15, 2009

மாமரத்தில் விளைச்சலை அதிகரிக்க

மா மரத்தில் அதிக பூ வைத்து விளைச்சலை அதிகரிக்க ஒரு தொழில் நுட்பத்தை பார்ப்போம். இத்தொழில் நுட்பம் தமிழகத்தை சேர்ந்த தர்மபுரி மற்றும் கிருஷ்னகிரியில் விவசாயிகளால் பின் பற்ற பட்டு லாபத்தை பெருக்க உதவி வருகிறது. இத்தொழில் நுட்பத்திற்கு மட் கா காட் என்று பெயர்.எருமை மாட்டிலிருந்து பெற பட்ட பாலிலிருந்து தயாரிக்க பட்ட மோர் 15 லிட்டர் எடுத்து கொண்டு அதனுடன் 15 லிட்டர் தண்ணீரை நன்கு கலக்க வேண்டும்.அதை மண் பானையில் ஊற்றி பானையின் மேல் பகுதியை துணியால் மூடி நிழல் பகுதியில் வைக்க வேண்டும் அல்லது மண்ணுக்கு அடியில் புதைத்து 21 நாட்கள் வைக்க வேண்டும்.அவ்வாறு வைப்பதால் நுண்ணுயிர் நொதித்தலால் பல நல்ல உயிர் ஊக்கி(bioactive molecule) பொருட்கள் உருவாகும்.1 லிட்டர் இந்த கலவையுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிப்பதனால் மா மரத்தில் பூக்கள் அதிகரித்து விளைச்சளும் அதிகரிக்கிறது.

--

Thursday, February 12, 2009

ரோஜா செடியில் பூச்சியை கட்டுபடுத்த எளிய முறை

வீட்டு தோட்டத்தில் வளர்க்க படும் ரோஜா செடியை அவ்வப்போது பூச்சி மற்றும் நோய் தாக்க வாய்ப்புண்டு. அவ்வாறு ஏற்படும் பூச்சி மற்றும் நோயை கட்டு படுத்த விவசாயிகளால் கண்டுபிடிக்க பட்ட எளிய முறை உள்ளது.10 கிராம் பெருங்காயத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளித்தால் அது பூச்சி/நோய் தாக்குதலை தடுப்பதுடன் அழகான மலரை மலர வைக்கவும் உதவும்.

--

Wednesday, February 11, 2009

பப்பாளியில் பெண் செடி பெறுவது எப்படி?

பெரும்பாலான பப்பாளி செடி வகைகள் ஒரு பால் வகையை கொண்டவை. ஒவ்வொரு பப்பாளி செடியும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கும்.சிறு செடியாக இருக்கும் போது அது எந்த வகை செடி என்பது கண்டறிவது கடினம்.நாம் வைக்கும் செடி ஆண் மரமாக இருந்து விட்டால் என்ன செய்வது? கவலை வேண்டாம். அந்த ஆண் செடியின் நுனி பகுதியை வெட்டி விடுங்கள். பிறகு புதிதாக துளிர்க்கும் தண்டுகள் பெண் மலர்களை தந்து பெண் செடியாக மாற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

--

வணக்கம்

விவசாய தொழில்நுட்பம், விவசாய துறை சார்ந்த பிரச்சனைகளை அலசல், வேளாண் சார்ந்த தொழில்களை பற்றிய செய்திகளின் தொகுப்பு, உலகளாவிய வேளாண் தொழில் பற்றிய நிலவரம் போன்றவற்றை விளக்கவும் விவசாயிகள்(பிற்காலத்தில் விவசாயிகளும் இணயத்தை பயன் படுத்த தொடங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன்) மற்றும் பொது வாசகர்களின் நன்மைக்காக ஆரம்பிக்க படும் கூட்டு பதிவு.இதில் பங்களிக்க வேளாண் விஞ்ஞானிகள்,வேளாண் சார்ந்த ஏற்றுமதி தொழில் செய்பவர்கள் மற்றும் பலர் இனைந்துள்ளனர்.

--