Monday, July 26, 2010

பயிர் இரகங்கள் பாதுகாப்பு சட்டம்

பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம்

(பாகம் 1)

விவசாயமே நம் நட்டின் பலம் என்ற் கருத்து பல்லாயிரம் ஆண்டுகளாக நம்மால் ஏற்றுக் கொள்ளபட்ட கருத்தாகும். நம் நாட்டின் மொத்த ஆண்டு வருவாயில் (GDP) 31 சதம் விவசாயம் மூலம் கிடைக்கிற்து என்று கணக்கிடப்பட்டு உள்ளது. மேலும், 64 சதத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விவசாயத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். எனவே, விவசாயம் சார்ந்த எந்த ஒரு முடிவுக்கும் பெரும் விளைவுகள் ஏற்படுவது இயல்பே!.

இதை மனதில் கொண்டே நீண்ட பரிசீலனைக்குப் பின் இந்திய அரசு "பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம்,2001" என்ற சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. இந்திய அரசு யூபாவின் பேடன்ட் முறையை அப்படியே பின்பற்றாமல், விவசாயிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் போதிய சுதந்திரமும், உரிமையும் அளிக்கக்கூடிய தனித்தன்மை உடையதாக உருவாக்கப்பட்டதே இச்சட்டம். 2001ல் இயற்றப்பட்ட இச்சட்டத்தின் விதி முறைகள் செப்டம்பர் 12, 2003ல் கெசட்டில் வெளியிடப்பட்டது.

இச்சட்டம் பற்றி அறியும் முன், 'காட்' (GATT), 'டிரிப்ஸ்' (TRIPS) மற்றும் உலக வர்தக சபை (WTO) பற்றிய ஒரு பிளாஷ் பேக்!

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் போரினால் ஏற்பபட்ட பாதிப்பை சீரமைக்கவும், நல்லுறவை ஏற்படுத்தவும் நேச நாடுகள் ஒன்று சேர்ந்து மூன்று ஸ்தாபனங்களை நிறுவின. முதலாவது 'காட்' , பன்னாட்டு உறவுகளை நெறிபடுத்துவதற்கானது; அடுத்தது 'ஐ.எம்.எப்'’ (ஈMF) - முறையான பணப்பரிமாற்றம் தொடர்பானது , மூன்றாவது 'உலக வங்கி' (World Bank / IBRD) போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைத்து மேம்படுத்துவதற்கானது.

இதில் 'காட்' ஒப்பந்தத்தின் உருகுவே மாநாட்டின் விளைவாக உருவானது தான் உலக வர்தக சபை. 'காட்'டில் உள்ள நாடுகள் ஜனவரி 1, 1995ல் உ.வ.சபை உருவாகக் கையெழுத்திட்டன. இந்தியாவும் உலக வர்தக சபையின் நிறுவன நாடுகளுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.உருகுவே மாநாட்டில் மூன்று புத்தம் புதிய ஒப்பந்தங்கள் உருவாயின. அதிலொன்றுதான் 'டிரிப்ஸ்'. மற்றவை, 'டிரிம்ஸ்' (TRIMS) ம், 'Trade in Services' ஆகும்.

'டிரிப்ஸ்' ஒப்பந்தம் ஐ.பி.ஆர் எனும் ‘Intellectual Property Rights’ மனித குலம் முன்னேற மிக அவசியம் என்கிறது. கண்டுபிடிப்பாளருக்கு பயனிருந்தால் தானே, புதியன கண்டுபிடிக்க ஊக்கம் பிறக்கும் என்பது இதன் லாஜிக்*.


டிரிப்ஸ்'ல் ஏழு வகையான 'ஐ.பி.ஆர்'கள் பாதுகாக்கப்படும். அவை, காப்பிரைட்ஸ், டிரேட் மார்க், பேடன்ட், ஜியாகரபிகல் இன்டிகேஸன் (உதாரணம்: காஞ்சிபுரம் பட்டு, டார்ஜிலிங் டீ), இன்டஸ்ட்ரியல் டிசைன், இன்டக்ரேடட் சர்க்யூட் மற்றும் டிரேட் சீக்ரெட்ஸ் ஆகும்.

'டிரிப்ஸ்' ஒப்பந்தப்படி செடிகளையும் விலங்குகளையும் பேடன்ட் செய்ய முடியாது. ஆனால், பயிர் இரகங்களை பாதுகாக்கலாம். எ.கா. நெல்லை பேடன்ட் செய்ய முடியாது ஆனால் அதன் இரகங்களை (பொன்னி, பொன்மணி, ADT 43) பாதுகாக்கலாம்.

(ப்ளாஸ் பேக் முடிந்தது. அப்பாடா!)
(தொடரும்)

--

Sunday, July 25, 2010

கில்ராய் பூண்டுத்திருவிழா!


நம்மூரில் கடவுளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் விழா எடுப்பது சர்வ சாதாரணம்.ஆனால் பூண்டுக்காக ஒரு திருவிழா என்றால் ஆச்சரியமாக உள்ளதா? ஆம் அது உண்மைதான். பூண்டுக்கு விழா எடுக்கப்படும் இடம் அமெரிக்க நாட்டு கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கில்ராய். கில்ராய் பகுதி பூண்டுகளுக்கு பிரசித்தம் பெற்றது.1979ம் ஆண்டு முதல் இந்த திருவிழா தொடங்கபட்டது.ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் கடைசி மாதம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் இந்த திருவிழா நடக்கும்.32 வது பூண்டு திருவிழா இந்த ஜூலை மாதம் 23,24,25 ம் நாள் நடைபெற்றது.

இந்த திருவிழாவின் முக்கிய அம்சம் பூண்டு சம்பத்தமான வித விதமான உணவு வகைகள் சுட சுட தயாரிக்க பட்டு பல ஸ்டால்களில் விற்பார்கள். பூண்டு சிக்கன் பிரை,பூண்டு காளாண்,பூண்டு கலந்த சாஸ் கொண்ட பாஸ்டா, பூண்டு ஐஸ் கிரிம்,பூண்டு கலந்த பிற மாமிச வகைகள் என அனைத்து உணவிலும் பூண்டு மயம் தான்!.உணவு தயாரிக்கும் முறைகளை அனைவரும் வேடிக்கை பார்க்கும் படி வைத்திருந்தனர். பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி, பூண்டு கலந்து, அதில் தீயை பற்ற வைத்து, எரியும் பாத்திரத்தில் உணவை சமைப்பதை பார்க்க பெரும் கூட்டம் கூடி இருந்தது.அங்கு பூண்டு சம்பந்தமான அனைத்து வகை உணவு பொருட்களும் ஸ்டால்களில் குவித்து வைக்க பட்டிருந்தது. இருக்கை கூட பூண்டு வைக்கோலை வைத்து தயாரித்து இருந்தனர்.மேலும் மக்கள் கண்டு களிக்க இசை நிகழ்ச்சிகள்,சிறுவர்கள் விளையாட பல வகை ரைடுகள் என அந்த இடமே கோலாகல பட்டது.ஆனால் வெயிலின் கொடுமை தான் மிக அதிகமாக இருந்தது. தன்னார்வ தொண்டர்கள் கடுமையான வெயிலிலும் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவது, வருபவர்களுக்கு பல உதவி செய்வது, என அயராது பணிகளை செய்தனர்.அவர்களை எப்படி பாராட்டினாலும் தகும்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி, அந்த விழாவில் தயாரிக்கபடும் உணவுகள் பெரும்பான்மையாவைக்கு தேவையான உணவு பொருட்கள அனைத்தும் அந்த பகுதியில் பயிரிட படும் உணவு பொருட்களிலிருந்தே தயாரிக்க பட்டது.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே கில்ராய் பகுதியை சுற்றி இருக்கும் சேவை நிறுவனக்களுக்கு பணம் திரட்டுவதே ஆகும். இதுவரை 85 லட்சத்து 25 ஆயிரத்து 322 டாலர் நிதி திரட்ட பட்டுள்ளது.தமிழ் நாட்டில் பல பகுதிகளில் பல காய் கறி, பழங்கள் பிரசித்தி பெற்றது. உதாரணமாக தர்மபுரி மாம்பழம், பண்ருட்டி பலா சேலம் கப்பை கிழங்கு, ஈரோடு மஞ்சள் என அடுக்கி கொண்டே செல்லலாம். நம்மூரிலும் இது போன்ற திருவிழா நடத்தி அந்தந்த பகுதியில் உள்ள சேவை நிறுவனங்களுக்கு உதவி,கிராம பள்ளிகளுக்கு நிதி என நல்ல காரியங்களுக்கு செலவிடலாம். அது மட்டுமன்றி நகரில் இருக்கும் மக்களுக்கும் நல்ல பொழுது போக்காக இருக்கும்.

--