Saturday, June 26, 2010

வேளாண்மையில் மரபணு மாற்ற தொழில் நுட்பம்(BT) 3 - B.T என்றால் என்ன?




முதல் பகுதி

இரண்டாம் பகுதி

இது மன்ணில் வாழும் ஒரு நுண்ணுயிர். இயற்கை தந்த வரம். இயற்கையின் அற்புதங்களில் இதுவும் ஒன்று.தானாக வந்தது. செயற்கையாக யாரும் உருவாக்கியது இல்லை.இயற்கையினால் உருவாக்க பட்ட உயிர்.இந்த உயிருக்கு B.T என்று விஞ்ஞானிகளால் பெயர் சூட்டபட்டுள்ளது. அதாவது bacillus thuringiensis என்ற பெயரின் சுருக்கம் தான் B.T.

மண்ணில் வேளாண்மைக்கு நன்மை செய்யும் உயிரிகள் ஏராளமாக உள்ளன. மண்ணில் வாழும் நுண்ணியிரிகளில் பெரும்பான்மையானவை பயிருக்கு நன்மை தான் செய்கின்றன.BT என்ற நுண்ணியிர் பேக்டீரியா வகையை சார்ந்தது. முதன் முதலில் இந்த நுண்ணியிர் ஜப்பான் நாட்டில் 100 ஆண்டுகளுக்கு முன் கன்டுபிடிக்க பட்டது. 1911ம் ஆண்டில் ஜெர்மனியில் உள்ள துரிஞ்சிஸ் என்ற இடத்தில் மீண்டும் கண்டு பிடிக்க பட்டது. அதனால் தான் பேசில்லஸ் துரிஞ்சன்ஸிஸ் என்ற பெயர் வந்தது.


இந்த நுண்ணியிரியில் என்ன உள்ளது?


இந்த பாக்டீரியாவில் பூச்சு மருந்துகளின் குணாதிசயம் கொண்ட 138 வகை மரபணுக்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். அதாவது பூச்சிகளை கொல்ல மருந்துகளை தெளிக்கின்றோம். ஆனால் இந்த நுண்ணியிரியிடம் இயற்கையிலேயே பூச்சிகளை கொல்லும் மருந்து தன் உடலினுள் உள்ளது.

இந்த நுண்ணியிரியில் உள்ள பூச்சி கொள்ளி மருந்தை தயாரிக்கும் ஜீன்களை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.அவற்றில் முக்கியமாக cry1ac என்ற மரபணு பருத்தி காய் புழுக்களை கட்டு படுத்தம் விஷத்தை உற்பத்தி செய்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து அந்த மரபணுக்களை ஆய்வகத்தில் தனியே பிரித்தெடுத்து உள்ளனர்.

பிறகு அந்த மரபணுக்களை பருத்தி செடிக்குள்ளே விட்டால் பருத்தி இயற்கையிலேயே காய்புழுக்களை கட்டு படுத்தும் தன்மை பெரும். விஞ்ஞானிகள் இதை வெற்றிகரமாக செய்து முடித்தும் விட்டர்கள். இதனால் என்ன நிகழ்கிறது என்றால், cry1ac என்ற மரபணு விஷ புரதத்தை பருத்தி செடியின் இலை,காய், பூ,சப்பை போன்ற பகுதியில் உர்பத்தி செய்கிறது.அதாவது இலை முளைத்த நாள் முதல், இளமை பருவம், சப்பை வைக்கும் பருவம், பூக்கும் பருவம்,காய் பருவம், அறுவடை பருவம் என முளையிலிருந்து அறுவடை வரை பயிரை காக்க உதவும்.

இது தான் தொழில் நுட்பத்தின் சாராம்சம். இனி இது தமிழ் நாட்டு விவசாயத்தில் BT நடத்தி வரும் புரட்சிகளை பற்றி இனி வரும் பதிவுகளில் காண்போம்.

--