Sunday, August 29, 2010

தலை கீழாய் வளரும் தக்காளி!

பொதுவாக தக்காளி செடியின் வேர் கீழ் நோக்கியும் தண்டு பகுதி புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல் நோக்கியும் வளர்வது வழக்கம்.இதுவே தக்காளியை மேலிருந்து கீழ் நோக்கி
வளர்த்தால் எப்படி இருக்கும்?.இந்த முயற்சியை தான் Topsy Turvy என்ற நிறுவனம் முயற்சி செய்து பார்த்து, அவ்வாறு வளர்ப்பதற்கு தேவையான தொட்டியையும் வடிவமைத்து அமெரிக்க சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

ஒரு செடி கீழிருந்து மேல் நோக்கி வளரும் போது அது நீர் மற்றும் மண்ணிலிருந்து உறிஞ்சும் சத்துக்களை புவு ஈர்ப்பு விசையை எதிர்த்து கீழேயிருந்து மேல் நோக்கி அனுப்ப வேண்டியுள்ளது. எனவே செடியை மேலிருந்து கீழ் நோக்கி வளர்க்கும் போது உணவு பொருளானது புவி ஈர்ப்பு விசையை நோக்கி கீழே பாய்ந்து காய் பகுதிகளை நோக்கி செல்வதால் விளைச்சல் அதிகம் இருக்கும் என்கிறது அந்த நிறுவனம்.அது மட்டுமன்றி செடி மேலே வளர்வதால் புழு மற்றும் நோய் பாதிப்பு பெருமளவு குறைகிறது என்கிறார்கள்.

நகர் புறங்களில் patio மற்றும் பால்கனிகளில் செடி வளர்ப்பதற்கு ஏற்ற அமைப்பு இது.

நான் இந்த செடி வளர்ப்பு தொட்டியை வீட்டில் வளர்த்து சோதனை செய்து பார்த்தேன். தக்காளி செடி நன்றாகவே வளர்கிறது. என் வீட்டு கொல்லை பகுதியில் வெயில் குறைவாக
கிடைப்பதால் இதன் உண்மையான விளைச்சளை என்னால் கணிக்க முடியவில்லை. ஆரம்ப காலங்களில் அடிக்கும் வேகமான காற்று இந்த செடியின் தண்டினை முறிக்க வாய்ப்பு
உள்ளது.நான் வளர்த்த போது ஒரு செடியின் தண்டு சிறிது முறிந்தாலும் அது தொடர்ந்து வளர்ந்து, அந்த கிளைகளில் காய்களையும் வைத்தது.













அமெரிக்காவில் நிறைய பேர் பால் கேனை மேலே கட்டி தொங்கவிட்டு இது போன்றே தக்காளி வளர்த்து முயற்சி செய்துள்ளனர்.

இது போன்ற மாதிரிகளை உருவாக்குவதும் மிக எளிது. உர சாக்கு பையை கிழித்து வட்ட வடிவில் தைத்து இதே போன்ற planterகளை எளிதாக நாமே உருவாக்களாம்.இதே முறையில் நிறய செடிகளை வளர்க்கவும் புதிய வகை மாதிரிகளை எளிதில் உருவாக்களா.இந்தியாவில் இது போல் புதிய மாதிரிகளை வடிவமைத்து, உற்பத்தி செய்து விற்றால் உற்பத்தி செய்பவருக்கு பணமும் கிடைக்கும். மக்களும் வீட்டிலே காய்கறி வளர்க்க வாய்ப்பும் கிடைக்கும்.

முக்கியமாக கிராம புற சுய உதவி குழக்கள் மூலம் இதை உற்பத்தி செய்வதன் மூலம் கிராம புரத்தில் நிறைய பேருக்கு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் இது போல் யாராவது முயற்சிக்கிறார்களா என்று தெரியவில்லை.மற்ற பதிவுகளில் எழுதியது போல் blog-ல் புலம்புவதோது விட்டு விடாமல், இம்முறை Topsy Turvy Planterகளை அரசு சாரா சேவை நிறுவனம்,விவசாய கல்லூரி, விவசாய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தோட்டகலையில் விருப்பம் உள்ளவர்களுக்கென இந்தியாவில் பல பேருக்கு வாங்கி அனுப்பியுள்ளேன். அதில் ஒரு சிலராவது நல்ல முயற்சி செய்து பார்க்கிறார்களா? என்று பார்ப்போம்.

--

Friday, August 6, 2010

பயிர் ரகங்கள் பாதுகாப்பு சட்டம் 2

பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம்

(பாகம்- 1)

இதற்கு தனியாக புதியதொரு சட்டம் தேவையா? நம் நாட்டின் பேடன்ட் சட்டம் போதாதா என்று தோன்றுகிறதல்லவா? இந்திய பேடன்ட் சட்டம் 1970ல் அமலானது. பின் 1999, 2002ல் மேலும் சில பிரிவுகள் இதில் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் இயந்திரங்கள், விவசாயக் கருவிகள், விவசாயப் பயன்பாட்டுள்ள இரசாயனங்களை உற்பத்தி செய்யும் முறைகள் ஆகியவற்றை மட்டுமே பேடன்ட் செய்யலாம். பின்வருவனவற்றை பேடன்ட் செய்ய முடியாது!

விவசாய சாகுபடி முறைகள், உயிரினங்கள், பயிரினங்கள், "பயிர் ரகங்கள்", விலங்குகள், மீன்கள், பறவைகள், ரசாயன மற்றும் உயிரிரசாயன வழிமுறைகள் மூலம் கிடைக்கும் பொருட்கள், மருத்துவம், அறுவை சிகிச்சை, தடுப்பு முறைகள், விலங்கு மற்றும் பயிர்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்க்கும் முறைகள், அவற்றின் வியாபார மதிப்பை அதிகரிக்கும் வழிகளை நமது பேடன்ட் சட்டம் மூலம் பாதுகாக்க இயலாது. இந்த சட்டத்தை அமலாக்குவதற்காக "பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை ஆணையத்தை" (Protection of Plant Varieties and Farmers Rights Authority) நவம்பர் 11, 2005ல் வெளியிட்ட கெசட் நோட்டிபிகேசன் மூலம் மத்திய அரசு நிறுவியுள்ளது.

PPV & FRA, 2001 சட்டத்தின் நோக்கம்
* தரமான விதை உற்பத்திக்கு உத்வேகம் அளித்து உயர்தர விதைகளை விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வது

*விவசாய ஆராய்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தி புதிய நிதி ஆதாரங்களை ஈர்த்து புதிய ரகங்களை உருவாக்குவது

* புதிய ரகங்களை உருவாக்கும் பயிர் இனப்பெருக்க வல்லுநரை (Plant breeder) ஊக்கப்படுத்தி விவசாய ஆராய்ச்சிக்கு புத்துயிர் அளிப்பது

* பாரம்பரியம் மிக்க ரகங்களை நீண்ட காலமாக பாதுகாத்து வரும் விவசாயிகளின் உரிமைகளை அங்கீகரித்து பாதுகாப்பது.

(தொடரும்)

--