மாற்றம் என்ற ஒன்றை தவிர மற்ற எல்லாம் மாறி கொண்டே தான் இருக்கும்.
என்ற முதுமொழிகேற்ப உலகில் உள்ள எல்லா விஷயங்களும் மாறி கொண்டே தான் இருக்கிறது.தகவல் பரிமாற்றத்திற்கு புறாவை பயன்படுத்தியது அந்த காலம். ஆனால் இன்று செல் போனில் அல்லவா உரையாடுகிறோம். முன்பு வங்கியில் பணம் எடுக்க வங்கிக்கு சென்று மணி கணக்கில் வரிசையில் நின்று சலான் பூர்த்தி செய்து பெரும் கஷ்ட்டத்திற்கு பின் பண்ம் எடுக்க வேண்டும்.ATM அறிமுக படுத்த பட்ட பின் இந்த நிலை முற்றிலும் மாறி விட்டது. இப்படி நடைமுறை சிக்கலாக இருந்த பல விஷயங்கள் விஞ்ஞான வளர்ச்சியால் எவ்வளவு சுலபமாக மாறிவிட்டது என்பதை உணர்ந்து அனுபவித்து மகிழ்ந்து வருகிறோம்.இது போல் அனைத்து துறைகளிலும் விஞ்ஞான வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து வருகிறது.வேளாண்மையிலும் இது போன்ற விஞ்ஞான வளர்ச்சி பெரும் அளவில் நடை பெற்றுள்ளது. ஆரம்ப காலங்களில் அனைவரும் தனது உணவுக்காக தானே வேளாண்மை செய்து உணவை ஈட்டி கொண்டிருந்தனர். ஆனால் மக்களின் வசதியான வாழ்வுக்கு பிற தேவைகள் அதிகமானவுடன் மக்களில் ஒரு பகுதியினர் பிற தேவைகளை பூர்த்தி செய்ய வேலை செய்து விவசாயம் செய்பவர்களிடம் உணவு பொருளை வாங்கினர். என்வே விவசாயிகள் மற்றவர்களுக்கும் சேர்த்து உணவு உற்பத்தி செய்ய வேண்டி இருந்தது.
சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் வரை நோய் மற்றும் போர்களினால் மக்கள் தொகை வளர்ச்சி பெருமளவுக்கு கட்டு படுத்த பட்டிருந்தது. ஆனால் சென்ற நூற்றாண்டில் ஏற்பட்ட மருத்துவ வளர்ச்சியால் மக்கள் தொகை வளர்ச்சி பெருமளவிற்கு அதிகரிக்க தொடங்கியது. பொருளாதார நிபுணர் மால்தூசின் கோட்பாட்டின் படி உலகில் பெரும் பஞ்சம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் பசுமை புரட்சி என்னும் விஞ்ஞான வளர்ச்சியால் பல லட்சம் பட்டினி சாவுகள் தடுக்க பட்டுள்ளன.பசுமை புரட்சி கடந்த 40 ஆண்டுகளாக மக்கள் தொகை வளர்ச்சியை பசியிலிருந்து காப்பாற்றியது. ஆனால் பசுமை புரட்சியால் ஏற்பட்ட உற்பத்தி பெருக்கத்தை விட அதிகளவு உற்பத்தி பெருக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டயத்தில் நாம் இப்போது உள்ளோம்.ஏழை மக்களை பசியிலிருந்து பாதுகாக்க வந்த வர பிரசாதம் தான் உயிரி தொழில் நுட்பம். அதிலும் முக்கியமாக மரபணு மாற்ற தொழில் நுட்பம்(GM crops).
அணு குண்டிற்கு இணையான பேரழிவு ஆயுதம் மரபணு மாற்ற தொழில் நுட்பம். -- இது தான் இன்று பத்திரிக்கைகள் மற்றும் வெகு ஜன ஊடகத்தால் பெருமளவு பரப்பபடும் செய்தி. பொது மக்களும் அறிவு ரீதியாக சிந்திக்காமல் உணர்வு ரீதியாக சிந்திக்க தூண்டபடுகிறார்கள். வேளாண்மையில் உயிரி தொழில் நுட்பம் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம்.சுற்று சூழல் கெடாமல் விவசாயம் செய்ய ஒரு எளிய வழியை இது ஏற்படுத்தி கொடுக்கிறது.பாரம்பரிய விவசாயம் போல் தரமான பொருளை உற்பத்தி செய்ய இது வழி வகுக்கும்.இருப்பினும் இந்த நுட்பம் பற்ரி சரியாக தெரிந்து கொள்ளாமல் பெரும் பாலோனோர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.உயிரியல் தொழில் நுட்பம் என்றால் என்ன என்பதை அனைவருக்கும் விளக்கவே இந்த பதிவை எழுதுகிறேன்.
மரபணு மாற்ற தொழில் நுட்பம் என்றால் என்ன?
ஒவ்வொரு செடிக்கும் ஒரு குணாதிசயம் உள்ளது. உதாரணமாக ஒரு நெல் செடி அதிக விளைச்சலை கொடுக்கும். ஒரு நெல் செடி அதிக நோய் எதிர்ப்பு தன்மை கொண்டதாக இருக்கும். இந்த இரண்டு செடியையும் மகரந்த சேர்க்கை செய்ய வைத்தால் கிடைக்கும் செடிக்கு இரண்டு பண்புகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.ஒரே வகையான செடியில் எளிதாக இணைப்பை ஏற்படுத்த முடியும்.
இரு சில தாவர வகைகள் வறண்ட பாலைவனத்தில் கூட நன்கு வளரும். ஒரு சில நுண்ணியிரிக்கு பயிர்களை தாக்கி அழிக்கும் புழு வகைகளுக்கு நோய் ஏற்படுத்தி அழிக்கும் தண்மை உள்ளது. ஆனால் இவற்றை நமக்கு தேவையான்(நெல், கோதுமை, பருத்தி etc) உணவு பயிர்களுடன் கூட வைத்தால் நமக்கு தேவையான பயிர்களின் வளர்ச்சியில் ஒரு புரட்சியே ஏற்படுத்தலாம். ஆனால் நம்மால் ஒரு வகை தாவரத்தையும் இன்னொரு வகை தாவரத்தையுமோ அல்லது நுண்ணியிரியையுமோ இணைக்க வைக்க முடியாதே. அப்பொழுதுதான் விஞ்ஞானத்தின் ஒரு மகத்தான கண்டுபிடிப்பு வந்தது. உயிர்களின் பண்புகளை நிர்ணயிப்பது ஜீன்கள் தான் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்தார்கள். அதற்கு பிறகு அறிவியல் வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்தது.
ஒரு தனிபட்ட குண நலன்களை நிர்ணயிக்கும் ஜீனை தனியே பிரித்தெடுக்க தொழில் நுட்பத்தை கண்டு பிடித்தனர்.மேலும் அந்த ஜீனை ஒரு தாவரத்தின் உயிரணுக்குள் செலுத்தி தாவரத்தில் அந்த குணாதிசியத்தை வெளிபடுத்தவும் முடியும் என்று கண்டு பிடித்தனர்.அந்த தொழில் நுட்பத்தின் பெயர் தான் மரபணு தொழில் நுட்பம்.
இயற்கையாக நடக்கும் மகரந்த சேர்க்கை மூலம் ஒரே வகையான பயிரிடம் உள்ள குணங்களை ஒன்று சேர்க்களாம். மரபனு மாற்றத்தின் மூலம் வேறு வகை பயிர் அல்லது உயிரியின் குணத்தை இன்னொரு பயிரிணுல் செலுத்தலாம். அவ்வளவு தான்
முதன் முதலில் பருத்தியில் என்ர உயிரியின் மரபனுவை செலுத்தி பருத்தி உற்பத்தியில் ஒரு புரட்சியே நடந்தது. அந்த புதிய பயிர் வெளி வரும் முன் பருத்தி விவசாயம் எப்படி இருந்தது என்றும் அது பருத்தி உற்பத்தியில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்ரியும் அடுத்த பதிவில் பார்க்களாம்
--