பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம்
(பாகம்- 1)
இதற்கு தனியாக புதியதொரு சட்டம் தேவையா? நம் நாட்டின் பேடன்ட் சட்டம் போதாதா என்று தோன்றுகிறதல்லவா? இந்திய பேடன்ட் சட்டம் 1970ல் அமலானது. பின் 1999, 2002ல் மேலும் சில பிரிவுகள் இதில் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் இயந்திரங்கள், விவசாயக் கருவிகள், விவசாயப் பயன்பாட்டுள்ள இரசாயனங்களை உற்பத்தி செய்யும் முறைகள் ஆகியவற்றை மட்டுமே பேடன்ட் செய்யலாம். பின்வருவனவற்றை பேடன்ட் செய்ய முடியாது!
விவசாய சாகுபடி முறைகள், உயிரினங்கள், பயிரினங்கள், "பயிர் ரகங்கள்", விலங்குகள், மீன்கள், பறவைகள், ரசாயன மற்றும் உயிரிரசாயன வழிமுறைகள் மூலம் கிடைக்கும் பொருட்கள், மருத்துவம், அறுவை சிகிச்சை, தடுப்பு முறைகள், விலங்கு மற்றும் பயிர்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்க்கும் முறைகள், அவற்றின் வியாபார மதிப்பை அதிகரிக்கும் வழிகளை நமது பேடன்ட் சட்டம் மூலம் பாதுகாக்க இயலாது. இந்த சட்டத்தை அமலாக்குவதற்காக "பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை ஆணையத்தை" (Protection of Plant Varieties and Farmers Rights Authority) நவம்பர் 11, 2005ல் வெளியிட்ட கெசட் நோட்டிபிகேசன் மூலம் மத்திய அரசு நிறுவியுள்ளது.
PPV & FRA, 2001 சட்டத்தின் நோக்கம்
* தரமான விதை உற்பத்திக்கு உத்வேகம் அளித்து உயர்தர விதைகளை விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வது
*விவசாய ஆராய்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தி புதிய நிதி ஆதாரங்களை ஈர்த்து புதிய ரகங்களை உருவாக்குவது
* புதிய ரகங்களை உருவாக்கும் பயிர் இனப்பெருக்க வல்லுநரை (Plant breeder) ஊக்கப்படுத்தி விவசாய ஆராய்ச்சிக்கு புத்துயிர் அளிப்பது
* பாரம்பரியம் மிக்க ரகங்களை நீண்ட காலமாக பாதுகாத்து வரும் விவசாயிகளின் உரிமைகளை அங்கீகரித்து பாதுகாப்பது.
(தொடரும்)
--
Friday, August 6, 2010
Monday, July 26, 2010
பயிர் இரகங்கள் பாதுகாப்பு சட்டம்
பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம்
(பாகம் 1)
விவசாயமே நம் நட்டின் பலம் என்ற் கருத்து பல்லாயிரம் ஆண்டுகளாக நம்மால் ஏற்றுக் கொள்ளபட்ட கருத்தாகும். நம் நாட்டின் மொத்த ஆண்டு வருவாயில் (GDP) 31 சதம் விவசாயம் மூலம் கிடைக்கிற்து என்று கணக்கிடப்பட்டு உள்ளது. மேலும், 64 சதத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விவசாயத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். எனவே, விவசாயம் சார்ந்த எந்த ஒரு முடிவுக்கும் பெரும் விளைவுகள் ஏற்படுவது இயல்பே!.
இதை மனதில் கொண்டே நீண்ட பரிசீலனைக்குப் பின் இந்திய அரசு "பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம்,2001" என்ற சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. இந்திய அரசு யூபாவின் பேடன்ட் முறையை அப்படியே பின்பற்றாமல், விவசாயிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் போதிய சுதந்திரமும், உரிமையும் அளிக்கக்கூடிய தனித்தன்மை உடையதாக உருவாக்கப்பட்டதே இச்சட்டம். 2001ல் இயற்றப்பட்ட இச்சட்டத்தின் விதி முறைகள் செப்டம்பர் 12, 2003ல் கெசட்டில் வெளியிடப்பட்டது.
இச்சட்டம் பற்றி அறியும் முன், 'காட்' (GATT), 'டிரிப்ஸ்' (TRIPS) மற்றும் உலக வர்தக சபை (WTO) பற்றிய ஒரு பிளாஷ் பேக்!
இரண்டாம் உலகப் போரின் இறுதியில் போரினால் ஏற்பபட்ட பாதிப்பை சீரமைக்கவும், நல்லுறவை ஏற்படுத்தவும் நேச நாடுகள் ஒன்று சேர்ந்து மூன்று ஸ்தாபனங்களை நிறுவின. முதலாவது 'காட்' , பன்னாட்டு உறவுகளை நெறிபடுத்துவதற்கானது; அடுத்தது 'ஐ.எம்.எப்'’ (ஈMF) - முறையான பணப்பரிமாற்றம் தொடர்பானது , மூன்றாவது 'உலக வங்கி' (World Bank / IBRD) போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைத்து மேம்படுத்துவதற்கானது.
இதில் 'காட்' ஒப்பந்தத்தின் உருகுவே மாநாட்டின் விளைவாக உருவானது தான் உலக வர்தக சபை. 'காட்'டில் உள்ள நாடுகள் ஜனவரி 1, 1995ல் உ.வ.சபை உருவாகக் கையெழுத்திட்டன. இந்தியாவும் உலக வர்தக சபையின் நிறுவன நாடுகளுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.உருகுவே மாநாட்டில் மூன்று புத்தம் புதிய ஒப்பந்தங்கள் உருவாயின. அதிலொன்றுதான் 'டிரிப்ஸ்'. மற்றவை, 'டிரிம்ஸ்' (TRIMS) ம், 'Trade in Services' ஆகும்.
'டிரிப்ஸ்' ஒப்பந்தம் ஐ.பி.ஆர் எனும் ‘Intellectual Property Rights’ மனித குலம் முன்னேற மிக அவசியம் என்கிறது. கண்டுபிடிப்பாளருக்கு பயனிருந்தால் தானே, புதியன கண்டுபிடிக்க ஊக்கம் பிறக்கும் என்பது இதன் லாஜிக்*.
டிரிப்ஸ்'ல் ஏழு வகையான 'ஐ.பி.ஆர்'கள் பாதுகாக்கப்படும். அவை, காப்பிரைட்ஸ், டிரேட் மார்க், பேடன்ட், ஜியாகரபிகல் இன்டிகேஸன் (உதாரணம்: காஞ்சிபுரம் பட்டு, டார்ஜிலிங் டீ), இன்டஸ்ட்ரியல் டிசைன், இன்டக்ரேடட் சர்க்யூட் மற்றும் டிரேட் சீக்ரெட்ஸ் ஆகும்.
'டிரிப்ஸ்' ஒப்பந்தப்படி செடிகளையும் விலங்குகளையும் பேடன்ட் செய்ய முடியாது. ஆனால், பயிர் இரகங்களை பாதுகாக்கலாம். எ.கா. நெல்லை பேடன்ட் செய்ய முடியாது ஆனால் அதன் இரகங்களை (பொன்னி, பொன்மணி, ADT 43) பாதுகாக்கலாம்.
(ப்ளாஸ் பேக் முடிந்தது. அப்பாடா!)

Sunday, July 25, 2010
கில்ராய் பூண்டுத்திருவிழா!
நம்மூரில் கடவுளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் விழா எடுப்பது சர்வ சாதாரணம்.ஆனால் பூண்டுக்காக ஒரு திருவிழா என்றால் ஆச்சரியமாக உள்ளதா? ஆம் அது உண்மைதான். பூண்டுக்கு விழா எடுக்கப்படும் இடம் அமெரிக்க நாட்டு கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கில்ராய். கில்ராய் பகுதி பூண்டுகளுக்கு பிரசித்தம் பெற்றது.1979ம் ஆண்டு முதல் இந்த திருவிழா தொடங்கபட்டது.ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் கடைசி மாதம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் இந்த திருவிழா நடக்கும்.32 வது பூண்டு திருவிழா இந்த ஜூலை மாதம் 23,24,25 ம் நாள் நடைபெற்றது.
இந்த திருவிழாவின் முக்கிய அம்சம் பூண்டு சம்பத்தமான வித விதமான உணவு வகைகள் சுட சுட தயாரிக்க பட்டு பல ஸ்டால்களில் விற்பார்கள். பூண்டு சிக்கன் பிரை,பூண்டு காளாண்,பூண்டு கலந்த சாஸ் கொண்ட பாஸ்டா, பூண்டு ஐஸ் கிரிம்,பூண்டு கலந்த பிற மாமிச வகைகள் என அனைத்து உணவிலும் பூண்டு மயம் தான்!.
உணவு தயாரிக்கும் முறைகளை அனைவரும் வேடிக்கை பார்க்கும் படி வைத்திருந்தனர். பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி, பூண்டு கலந்து, அதில் தீயை பற்ற வைத்து, எரியும் பாத்திரத்தில் உணவை சமைப்பதை பார்க்க பெரும் கூட்டம் கூடி இருந்தது.
அங்கு பூண்டு சம்பந்தமான அனைத்து வகை உணவு பொருட்களும் ஸ்டால்களில் குவித்து வைக்க பட்டிருந்தது. இருக்கை கூட பூண்டு வைக்கோலை வைத்து தயாரித்து இருந்தனர்.
மேலும் மக்கள் கண்டு களிக்க இசை நிகழ்ச்சிகள்,சிறுவர்கள் விளையாட பல வகை ரைடுகள் என அந்த இடமே கோலாகல பட்டது.
ஆனால் வெயிலின் கொடுமை தான் மிக அதிகமாக இருந்தது. தன்னார்வ தொண்டர்கள் கடுமையான வெயிலிலும் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவது, வருபவர்களுக்கு பல உதவி செய்வது, என அயராது பணிகளை செய்தனர்.அவர்களை எப்படி பாராட்டினாலும் தகும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி, அந்த விழாவில் தயாரிக்கபடும் உணவுகள் பெரும்பான்மையாவைக்கு தேவையான உணவு பொருட்கள அனைத்தும் அந்த பகுதியில் பயிரிட படும் உணவு பொருட்களிலிருந்தே தயாரிக்க பட்டது.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே கில்ராய் பகுதியை சுற்றி இருக்கும் சேவை நிறுவனக்களுக்கு பணம் திரட்டுவதே ஆகும். இதுவரை 85 லட்சத்து 25 ஆயிரத்து 322 டாலர் நிதி திரட்ட பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் பல பகுதிகளில் பல காய் கறி, பழங்கள் பிரசித்தி பெற்றது. உதாரணமாக தர்மபுரி மாம்பழம், பண்ருட்டி பலா சேலம் கப்பை கிழங்கு, ஈரோடு மஞ்சள் என அடுக்கி கொண்டே செல்லலாம். நம்மூரிலும் இது போன்ற திருவிழா நடத்தி அந்தந்த பகுதியில் உள்ள சேவை நிறுவனங்களுக்கு உதவி,கிராம பள்ளிகளுக்கு நிதி என நல்ல காரியங்களுக்கு செலவிடலாம். அது மட்டுமன்றி நகரில் இருக்கும் மக்களுக்கும் நல்ல பொழுது போக்காக இருக்கும்.
--
Saturday, June 26, 2010
வேளாண்மையில் மரபணு மாற்ற தொழில் நுட்பம்(BT) 3 - B.T என்றால் என்ன?

முதல் பகுதி
இரண்டாம் பகுதி
இது மன்ணில் வாழும் ஒரு நுண்ணுயிர். இயற்கை தந்த வரம். இயற்கையின் அற்புதங்களில் இதுவும் ஒன்று.தானாக வந்தது. செயற்கையாக யாரும் உருவாக்கியது இல்லை.இயற்கையினால் உருவாக்க பட்ட உயிர்.இந்த உயிருக்கு B.T என்று விஞ்ஞானிகளால் பெயர் சூட்டபட்டுள்ளது. அதாவது bacillus thuringiensis என்ற பெயரின் சுருக்கம் தான் B.T.
மண்ணில் வேளாண்மைக்கு நன்மை செய்யும் உயிரிகள் ஏராளமாக உள்ளன. மண்ணில் வாழும் நுண்ணியிரிகளில் பெரும்பான்மையானவை பயிருக்கு நன்மை தான் செய்கின்றன.BT என்ற நுண்ணியிர் பேக்டீரியா வகையை சார்ந்தது. முதன் முதலில் இந்த நுண்ணியிர் ஜப்பான் நாட்டில் 100 ஆண்டுகளுக்கு முன் கன்டுபிடிக்க பட்டது. 1911ம் ஆண்டில் ஜெர்மனியில் உள்ள துரிஞ்சிஸ் என்ற இடத்தில் மீண்டும் கண்டு பிடிக்க பட்டது. அதனால் தான் பேசில்லஸ் துரிஞ்சன்ஸிஸ் என்ற பெயர் வந்தது.
இந்த நுண்ணியிரியில் என்ன உள்ளது?
இந்த பாக்டீரியாவில் பூச்சு மருந்துகளின் குணாதிசயம் கொண்ட 138 வகை மரபணுக்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். அதாவது பூச்சிகளை கொல்ல மருந்துகளை தெளிக்கின்றோம். ஆனால் இந்த நுண்ணியிரியிடம் இயற்கையிலேயே பூச்சிகளை கொல்லும் மருந்து தன் உடலினுள் உள்ளது.
இந்த நுண்ணியிரியில் உள்ள பூச்சி கொள்ளி மருந்தை தயாரிக்கும் ஜீன்களை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.அவற்றில் முக்கியமாக cry1ac என்ற மரபணு பருத்தி காய் புழுக்களை கட்டு படுத்தம் விஷத்தை உற்பத்தி செய்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து அந்த மரபணுக்களை ஆய்வகத்தில் தனியே பிரித்தெடுத்து உள்ளனர்.
பிறகு அந்த மரபணுக்களை பருத்தி செடிக்குள்ளே விட்டால் பருத்தி இயற்கையிலேயே காய்புழுக்களை கட்டு படுத்தும் தன்மை பெரும். விஞ்ஞானிகள் இதை வெற்றிகரமாக செய்து முடித்தும் விட்டர்கள். இதனால் என்ன நிகழ்கிறது என்றால், cry1ac என்ற மரபணு விஷ புரதத்தை பருத்தி செடியின் இலை,காய், பூ,சப்பை போன்ற பகுதியில் உர்பத்தி செய்கிறது.அதாவது இலை முளைத்த நாள் முதல், இளமை பருவம், சப்பை வைக்கும் பருவம், பூக்கும் பருவம்,காய் பருவம், அறுவடை பருவம் என முளையிலிருந்து அறுவடை வரை பயிரை காக்க உதவும்.
இது தான் தொழில் நுட்பத்தின் சாராம்சம். இனி இது தமிழ் நாட்டு விவசாயத்தில் BT நடத்தி வரும் புரட்சிகளை பற்றி இனி வரும் பதிவுகளில் காண்போம்.
--
Sunday, May 16, 2010
வருங்கால விவசாயத்தை எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனை
பயிருக்கு தேவையான சத்துக்களில் முக்கியமானது தழை சத்து எனப்படும் நைட்ரஜனும், மணி சத்து என்னும் பாஸ்பரசும், சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஸ் சத்தும் ஆகும்..உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றாற்போல் உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு உரங்களின் தேவை இன்றி அமையாதது ஆகும்.ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் 17 மில்லியன் டன் மணிசத்து சார்ந்த உரங்களை இடுகின்றனர். அதுமட்டுமன்றி இதன் தேவை ஆண்டொன்றுக்கு 3 சதம் அதிகரிக்கிறது.தற்போது மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தி வர தொடங்கி உள்ளது. தற்போதைய நிலவரபடி இன்னும் 30 - 40 ஆண்டுகள் வரைதான் விவசாய வளர்ச்சிக்கு இணையாக மணி சத்து சார்ந்த உரங்களை உற்பத்தி செய்ய முடியும்.அது மட்டுமல்ல. தற்போது உற்பத்தி ஆகும் மணி சத்தில் 90% மொராக்கோ,சீனா,தென் அமெரிக்கா,ஜோர்டான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கிடைக்கிறது.எண்ணெய் வளம் கூட 75% 12 நாடுகளிலிருந்து கிடைக்கிறது. ஆனால் மணி சத்தோ 5 நாடுகளிடம் மட்டுமே உள்ளது. தட்டுபாடு காலங்களில் சீனா மணி சத்துக்கான ஏற்றுமதி வரியை 135 சதம் உயர்த்தியது. அமெரிக்காவின் மணி சத்து சுரங்கங்கள் இன்னும் 20 வருடங்களில் வற்றி விடும் அபாய நிலை உள்ளது.இதன் விளைவாக கடந்த 2003 முதல் 2006 வரை மணி சத்தின் விளை 350 சதம் உயர்ந்துள்ளது. 30 வருடங்களுக்கு பிறகு மணி சத்தின் உற்பத்தி பெருமளவு குறைந்தால் மால்தூஸ் கூறியபடி பெரும் பஞ்சம் வரக்கூட வாய்ப்பு உள்ளது.இதற்கு தீர்வாக முழுமையான இயற்கை விவசாயத்தை நோக்கி சென்றாலும் வளரும் மக்கள் தொகைக்கு உணவளிப்பது கடினம்.
இதற்கு தீர்வு தான் என்ன?
1.முடிந்த அளவு மணி சத்தை தற்போதிலிருந்தே சானம் மற்றும் இயற்கை எருக்கள்(பசுந்தாள் உரம்) மூலம் இட தொடங்க வேண்டும்.
2.தேவையற்ற மணி சத்து உரத்தை அளிப்பதை தவிர்க்க வேண்டும். பயிருக்கு தேவையான அளவு மணி சத்தை தேவையான நேரத்தில் தேவையான முறையில் மட்டும் கொடுக்க வேண்டும்.இதன் மூலம் மணி சத்து வீணாவதை குறைப்பதுடன் பயிரின் உற்பத்தி செலவை குறைத்து லாபத்தையும் பெருக்கலாம். மண் பரிசோதனை செய்வதன் மூலம் பயிருக்கு தேவையான மணி சத்தின் சரியான விகிதத்தை எளிதில் அறிந்து கொள்ளலாம்.
3. மண்னில் அதிக அளவு மணி சத்து உள்ளது. ஆனால் அவை பயிரால் உபயோகபடுத்த முடியாத படி உள்ளது.ஒரு சில நுண்ணுயிர்கள் அமிலத்தை உற்பத்தி செய்து மணிசத்தை கரைத்து பயிர்களின் வேர்கள் எடுக்கும் நிலைக்கு மாற்றி கொடுக்கும். இதன் மூலம் மணி சத்து உரத்தின் தேவையை குறைக்களாம்.இவ்வகை நுண்ணுயிரிகளை பாஸ்போபாக்டீரியா என்று அழைக்கிறோம்.ஆனால் இவை மண்ணில் இருக்கும் ஆனால் பயிர்களால் எடுக்க முடியாத மணி சத்தை தான் பயிருக்கு எடுக்க உதவும்
4. மணி சத்து குறைந்த அளவு எடுத்து அதிக விளைச்சளை கொடுக்கும் ரகங்களை வேளாண் விஞ்ஞானிகள் கண்டு பிடிக்க வேண்டும்.
5.மனித கழிவுகளில் தான் அதிக அளவு மணி சத்து உள்ளது. எனவே நகர்புற மனித கழிவுகளிலிருந்து மணி சத்தை எடுக்கும் வழி வகையை கண்டுபிடிக்க வேண்டும்
எண்னெய் வளம் குறைந்தால் கூட அதற்கு மாற்று சக்தியாக சூரிய ஒளி,காற்று, அணு சக்தி என்று பல உள்ளது. ஆனால் மணி சத்து உரத்துக்கு மாற்று மேல் சொன்ன முறைகள் தான் என்பதை மறந்து விட கூடாது. வருங்கால சந்ததியரின் உணவு தேவை குறித்து இப்போதே சிந்திப்பது நல்லது.
இந்த பிரச்ச்னையின் பரிமாணம் இன்னும் உலகுக்கு பெரிய அளவில் தெரிய வில்லை.

Tuesday, April 6, 2010
வேளாண்மையில் மரபணு மாற்ற தொழில் நுட்பம்(BT) 2 -பருத்தியில் BT

முதல் பகுதி
பருத்தி செடியை சீரழிக்கும் கொடுமையான 3 பூச்சிக்கள் உள்ளன.அமெரிக்க காய் புழு என்று சொல்ல படும் பச்சை காய்புழு,புள்ளி காய்புழு மற்றும் இளம் சிவப்பு காய்புழு.இந்த மூன்று காய்புழுக்களுமே பருத்தியை தாக்கி பெருமளவு சேதம் விளைவிக்கிறது.உலகளவில் பருத்தி எங்கெங்கெளாம் விளைவிக்க படுகிறதோ அங்கங்கெல்லாம் இந்த காய் புழு பருத்தியை தாக்கி பெரும் சேதம் விளைவிக்கிறது.
இந்த காய் புழுவை கட்டு படுத்த எவ்வளவு செலவு ஆகிறது என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.இந்தியாவில் மட்டும் 162 வகை பூச்சி வகைகள் பருத்தியை தாக்குகின்றன.இந்தியாவில் உள்ள அனைத்து பயிர்களையும் தாக்கும் பூச்சிகளை கட்டுபடுத்த பூச்சி மருந்து மட்டும் 4500 கோடி செலவு செய்ய படுகிறது. இதில் பருத்திக்கு மட்டும் ஆண்டொண்டிற்கு செலவாகிறது. பருத்தி காய் புழுவை கட்டு படுத்த மட்டும் 1100 கோடி செலவாகிறது.ஆண்டு தோறும் 1100 கோடி செலவிட்டு பூச்சி மருந்து அடித்தாலும் காய் புழுவை கட்டு படுத்த முடிகிறதா என்றால் முடிய வில்லை என்பது தான் பதிலாக இருக்கும்.
ஆண்டுக்கு ஆண்டு செலவு கூடுகிறதே தவிர காய் புழுவை கட்டு படுத்த முடியவில்லை. இந்த காய் புழுவிற்கு பயந்து தேனி மற்றும் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த பல விவசாயிகள் பல ஆண்டுகளுக்கு முன்னால் பருத்தி விவசாயத்தையே கை விட்டு விட்டனர்.ஆத்தூர் பெரம்பலூர் பகுதிகளில் 15 - 20 ஆண்டுகளுக்கு முன்னால் எங்கு பார்த்தாலும் மானாவாரி நிலங்களில் பருத்தி செய்தனர்.அதிலும் குறிப்பாக RCH2 போன்ற வீரிய பருத்தி சாகுபடி செய்த போது ஏக்கருக்கு 10 - 12 குவிண்டால் மக்சூல் பெற்று பணம் குவித்தனர். ஏக்கருக்கு 6000 ரூபாய் அளவில் பூச்சி மருந்துகளை வாங்கி தெளித்தனர்.பைரித்ராய்டு போன்ற கடுமையான விஷம் உள்ள மருந்துகளை அளவின்றி தெளித்தனர். ஒரு சிறிய மருந்து கடையில் கூட 1 கோடி ரூபாய்க்கு மருந்து விற்க பட்டது. அதன் விளைவு என்ன? காய் புழு அத்தனை மருந்துகளையும் எதிர்த்து பீடு நடை போட்டு வளர்ந்து பயிரை சேதம் செய்து வந்தது. அதன் விளைவு ஏக்கருக்கு 3,4 குவிண்டால் கூட உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. விளைவு- விவசாயிகள் வேறு பயிரை சாகுபடி செய்ய தொடங்கினர்.வாழ வைத்த பருத்தி வறுமைக்கு ஆச்சாரம் போட்டது.இந்த சமயத்தில் தான் உயிரியல் தொழில் நுட்பம் வெளிவர தொடங்கியது.பருத்தி விவசாயிகளின் வழ்க்கையில் ஒளி விளக்காக வந்தது BT தொழில் நுட்பம். அத்தொழில் நுட்பம் பற்ரியும் அது தமிழக விவசாயத்தில் ஏற்படுத்திய அதிசியங்களையும் வரும் பதிவுகளில் பார்ப்போம்
--
Saturday, March 13, 2010
வேளாண்மையில் மரபணு மாற்ற தொழில் நுட்பம்(BT) - அடிப்படை உண்மைகள்
மாற்றம் என்ற ஒன்றை தவிர மற்ற எல்லாம் மாறி கொண்டே தான் இருக்கும்.
என்ற முதுமொழிகேற்ப உலகில் உள்ள எல்லா விஷயங்களும் மாறி கொண்டே தான் இருக்கிறது.தகவல் பரிமாற்றத்திற்கு புறாவை பயன்படுத்தியது அந்த காலம். ஆனால் இன்று செல் போனில் அல்லவா உரையாடுகிறோம். முன்பு வங்கியில் பணம் எடுக்க வங்கிக்கு சென்று மணி கணக்கில் வரிசையில் நின்று சலான் பூர்த்தி செய்து பெரும் கஷ்ட்டத்திற்கு பின் பண்ம் எடுக்க வேண்டும்.ATM அறிமுக படுத்த பட்ட பின் இந்த நிலை முற்றிலும் மாறி விட்டது. இப்படி நடைமுறை சிக்கலாக இருந்த பல விஷயங்கள் விஞ்ஞான வளர்ச்சியால் எவ்வளவு சுலபமாக மாறிவிட்டது என்பதை உணர்ந்து அனுபவித்து மகிழ்ந்து வருகிறோம்.இது போல் அனைத்து துறைகளிலும் விஞ்ஞான வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து வருகிறது.வேளாண்மையிலும் இது போன்ற விஞ்ஞான வளர்ச்சி பெரும் அளவில் நடை பெற்றுள்ளது. ஆரம்ப காலங்களில் அனைவரும் தனது உணவுக்காக தானே வேளாண்மை செய்து உணவை ஈட்டி கொண்டிருந்தனர். ஆனால் மக்களின் வசதியான வாழ்வுக்கு பிற தேவைகள் அதிகமானவுடன் மக்களில் ஒரு பகுதியினர் பிற தேவைகளை பூர்த்தி செய்ய வேலை செய்து விவசாயம் செய்பவர்களிடம் உணவு பொருளை வாங்கினர். என்வே விவசாயிகள் மற்றவர்களுக்கும் சேர்த்து உணவு உற்பத்தி செய்ய வேண்டி இருந்தது.
சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் வரை நோய் மற்றும் போர்களினால் மக்கள் தொகை வளர்ச்சி பெருமளவுக்கு கட்டு படுத்த பட்டிருந்தது. ஆனால் சென்ற நூற்றாண்டில் ஏற்பட்ட மருத்துவ வளர்ச்சியால் மக்கள் தொகை வளர்ச்சி பெருமளவிற்கு அதிகரிக்க தொடங்கியது. பொருளாதார நிபுணர் மால்தூசின் கோட்பாட்டின் படி உலகில் பெரும் பஞ்சம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் பசுமை புரட்சி என்னும் விஞ்ஞான வளர்ச்சியால் பல லட்சம் பட்டினி சாவுகள் தடுக்க பட்டுள்ளன.பசுமை புரட்சி கடந்த 40 ஆண்டுகளாக மக்கள் தொகை வளர்ச்சியை பசியிலிருந்து காப்பாற்றியது. ஆனால் பசுமை புரட்சியால் ஏற்பட்ட உற்பத்தி பெருக்கத்தை விட அதிகளவு உற்பத்தி பெருக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டயத்தில் நாம் இப்போது உள்ளோம்.ஏழை மக்களை பசியிலிருந்து பாதுகாக்க வந்த வர பிரசாதம் தான் உயிரி தொழில் நுட்பம். அதிலும் முக்கியமாக மரபணு மாற்ற தொழில் நுட்பம்(GM crops).
அணு குண்டிற்கு இணையான பேரழிவு ஆயுதம் மரபணு மாற்ற தொழில் நுட்பம். -- இது தான் இன்று பத்திரிக்கைகள் மற்றும் வெகு ஜன ஊடகத்தால் பெருமளவு பரப்பபடும் செய்தி. பொது மக்களும் அறிவு ரீதியாக சிந்திக்காமல் உணர்வு ரீதியாக சிந்திக்க தூண்டபடுகிறார்கள். வேளாண்மையில் உயிரி தொழில் நுட்பம் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம்.சுற்று சூழல் கெடாமல் விவசாயம் செய்ய ஒரு எளிய வழியை இது ஏற்படுத்தி கொடுக்கிறது.பாரம்பரிய விவசாயம் போல் தரமான பொருளை உற்பத்தி செய்ய இது வழி வகுக்கும்.இருப்பினும் இந்த நுட்பம் பற்ரி சரியாக தெரிந்து கொள்ளாமல் பெரும் பாலோனோர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.உயிரியல் தொழில் நுட்பம் என்றால் என்ன என்பதை அனைவருக்கும் விளக்கவே இந்த பதிவை எழுதுகிறேன்.
மரபணு மாற்ற தொழில் நுட்பம் என்றால் என்ன?
ஒவ்வொரு செடிக்கும் ஒரு குணாதிசயம் உள்ளது. உதாரணமாக ஒரு நெல் செடி அதிக விளைச்சலை கொடுக்கும். ஒரு நெல் செடி அதிக நோய் எதிர்ப்பு தன்மை கொண்டதாக இருக்கும். இந்த இரண்டு செடியையும் மகரந்த சேர்க்கை செய்ய வைத்தால் கிடைக்கும் செடிக்கு இரண்டு பண்புகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.ஒரே வகையான செடியில் எளிதாக இணைப்பை ஏற்படுத்த முடியும்.
இரு சில தாவர வகைகள் வறண்ட பாலைவனத்தில் கூட நன்கு வளரும். ஒரு சில நுண்ணியிரிக்கு பயிர்களை தாக்கி அழிக்கும் புழு வகைகளுக்கு நோய் ஏற்படுத்தி அழிக்கும் தண்மை உள்ளது. ஆனால் இவற்றை நமக்கு தேவையான்(நெல், கோதுமை, பருத்தி etc) உணவு பயிர்களுடன் கூட வைத்தால் நமக்கு தேவையான பயிர்களின் வளர்ச்சியில் ஒரு புரட்சியே ஏற்படுத்தலாம். ஆனால் நம்மால் ஒரு வகை தாவரத்தையும் இன்னொரு வகை தாவரத்தையுமோ அல்லது நுண்ணியிரியையுமோ இணைக்க வைக்க முடியாதே. அப்பொழுதுதான் விஞ்ஞானத்தின் ஒரு மகத்தான கண்டுபிடிப்பு வந்தது. உயிர்களின் பண்புகளை நிர்ணயிப்பது ஜீன்கள் தான் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்தார்கள். அதற்கு பிறகு அறிவியல் வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்தது.
ஒரு தனிபட்ட குண நலன்களை நிர்ணயிக்கும் ஜீனை தனியே பிரித்தெடுக்க தொழில் நுட்பத்தை கண்டு பிடித்தனர்.மேலும் அந்த ஜீனை ஒரு தாவரத்தின் உயிரணுக்குள் செலுத்தி தாவரத்தில் அந்த குணாதிசியத்தை வெளிபடுத்தவும் முடியும் என்று கண்டு பிடித்தனர்.அந்த தொழில் நுட்பத்தின் பெயர் தான் மரபணு தொழில் நுட்பம்.
இயற்கையாக நடக்கும் மகரந்த சேர்க்கை மூலம் ஒரே வகையான பயிரிடம் உள்ள குணங்களை ஒன்று சேர்க்களாம். மரபனு மாற்றத்தின் மூலம் வேறு வகை பயிர் அல்லது உயிரியின் குணத்தை இன்னொரு பயிரிணுல் செலுத்தலாம். அவ்வளவு தான்
முதன் முதலில் பருத்தியில் என்ர உயிரியின் மரபனுவை செலுத்தி பருத்தி உற்பத்தியில் ஒரு புரட்சியே நடந்தது. அந்த புதிய பயிர் வெளி வரும் முன் பருத்தி விவசாயம் எப்படி இருந்தது என்றும் அது பருத்தி உற்பத்தியில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்ரியும் அடுத்த பதிவில் பார்க்களாம்

Subscribe to:
Posts (Atom)