Sunday, April 26, 2009

நெல்லில் நல்ல விதையை தேர்ந்து எடுப்பது எப்படி?

வயலில் தேவையான பயிரின் எண்ணிக்கையை பெருவதற்கு விதையின் முளைப்பு திறனை அறிவது மிகவும் அவசியம். பொதுவாக விவசாயிகள் தங்கள் விதையை பிறரிடமிருந்து வாங்குவதால் அதன் முளைப்பு திறன் குறித்து அறிந்திருப்பது கடினம். தங்களிடம் உள்ள விதைகளில் நன்கு முளைப்பு திறன் மட்டும் உள்ள விதையை பிரித்து எடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் அள்ளவா? அதற்கும் ஒரு எளிய தொழில் நுட்பம் உள்ளது.

1. முதலில் ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு முட்டையை போடுங்கள். அந்த முட்டை தண்ணீருக்கு அடியில் சென்று அங்கேயே தங்கி விட்டால் அது நல்ல முட்டை. அந்த முட்டையை நம்முடைய நல் விதையை பிரிக்கும் முயற்ச்சிக்கு எடுத்து கொள்ளலாம்.

2. அந்த முட்டையை தண்ணிரிலிருந்து எடுத்து விடவும்.

3. 200 கிராம் உப்பை(1 லிட்டர் தண்ணீருக்கு) தண்ணீரில் இட்டு கரைக்கவும்.

4. தற்போது முட்டையை தண்ணிரில் போடவும். முட்டை தண்ணீரில் மிதக்க வேண்டும். அதன் மேல் பகுதி (25 பைசா நாணயம் அளவு) மட்டும் வெளியில் தெரியவேண்டும். அவ்வாறு இருந்தால் கரைசல் நமக்கு தேவையான அளவு உள்ளது என்று அர்த்தம். அவ்வாறு இல்லாவிட்டால் உப்பின் அளவை அதிகரித்து அல்லது புதிய கரைசலை தயார் செய்து சரி செய்யவும்

5. அந்த கரைசலில் நெல் விதையை இடவும்

6 சில நிமிடத்தில் தண்ணீரில் மிதக்கும் விதையை வெளியில் எடுத்து விடவும். அது பதர் விதை. அது முளைக்காது.

7. 10 - 15 நிமிடம் கழித்து மேலுள்ள தண்ணிரை வடிய விடவும்.அடியில் தங்கிய விதையை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். பிறகு நல்ல தண்ணீரில் கழுவவும்.

8. பிறகு விதைக்கும் முன் நிழலில் உலர்த்தவும்

இதன் மூலம் நல்ல முளைப்பு தன்மை உள்ள விதையை மட்டும் தனியே பிரித்து எடுக்களாம்

--

3 comments:

  1. உபயோகம் உள்ள அருமையான பதிவு. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    அஜய்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கு நன்றி அஜய்

    ReplyDelete
  3. திரு சதுக்க பூதம் அவர்களே வணக்கம்!
    உங்கள் வேளான் தகவல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளன . பாமரரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் அம்மைந்துள்ளது . தொடர்ந்து எழுதவும். அன்புடன்
    அண்ணன் குரிஞ்சிப்பாடியார்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்