Friday, August 6, 2010

பயிர் ரகங்கள் பாதுகாப்பு சட்டம் 2

பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டம்

(பாகம்- 1)

இதற்கு தனியாக புதியதொரு சட்டம் தேவையா? நம் நாட்டின் பேடன்ட் சட்டம் போதாதா என்று தோன்றுகிறதல்லவா? இந்திய பேடன்ட் சட்டம் 1970ல் அமலானது. பின் 1999, 2002ல் மேலும் சில பிரிவுகள் இதில் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் இயந்திரங்கள், விவசாயக் கருவிகள், விவசாயப் பயன்பாட்டுள்ள இரசாயனங்களை உற்பத்தி செய்யும் முறைகள் ஆகியவற்றை மட்டுமே பேடன்ட் செய்யலாம். பின்வருவனவற்றை பேடன்ட் செய்ய முடியாது!

விவசாய சாகுபடி முறைகள், உயிரினங்கள், பயிரினங்கள், "பயிர் ரகங்கள்", விலங்குகள், மீன்கள், பறவைகள், ரசாயன மற்றும் உயிரிரசாயன வழிமுறைகள் மூலம் கிடைக்கும் பொருட்கள், மருத்துவம், அறுவை சிகிச்சை, தடுப்பு முறைகள், விலங்கு மற்றும் பயிர்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்க்கும் முறைகள், அவற்றின் வியாபார மதிப்பை அதிகரிக்கும் வழிகளை நமது பேடன்ட் சட்டம் மூலம் பாதுகாக்க இயலாது. இந்த சட்டத்தை அமலாக்குவதற்காக "பயிர் ரகங்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை ஆணையத்தை" (Protection of Plant Varieties and Farmers Rights Authority) நவம்பர் 11, 2005ல் வெளியிட்ட கெசட் நோட்டிபிகேசன் மூலம் மத்திய அரசு நிறுவியுள்ளது.

PPV & FRA, 2001 சட்டத்தின் நோக்கம்
* தரமான விதை உற்பத்திக்கு உத்வேகம் அளித்து உயர்தர விதைகளை விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வது

*விவசாய ஆராய்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தி புதிய நிதி ஆதாரங்களை ஈர்த்து புதிய ரகங்களை உருவாக்குவது

* புதிய ரகங்களை உருவாக்கும் பயிர் இனப்பெருக்க வல்லுநரை (Plant breeder) ஊக்கப்படுத்தி விவசாய ஆராய்ச்சிக்கு புத்துயிர் அளிப்பது

* பாரம்பரியம் மிக்க ரகங்களை நீண்ட காலமாக பாதுகாத்து வரும் விவசாயிகளின் உரிமைகளை அங்கீகரித்து பாதுகாப்பது.

(தொடரும்)

--

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்