Sunday, June 14, 2009

பயிருக்கு தேவையான சத்துக்கள்- ஒரு அறிமுகம் – 1

மண் வள மேம்பாடு என்பது விவசாயத்தில் மிக முக்கிய முதலீடு என்பது மறுக்க முடியாது.ஏனென்றால் விவசாயத்திற்கு ஆகும் செலவில் 40 சதவிதம், வேளாண் இடுபொருட்களுக்கு ஆகும் செலவாக உள்ளது.

பொதுவாக நாம் உரங்களை இடுவதில் அறிவியல் பூர்வமான நடைமுறைகளை பின்பற்றுவதில்லை.தழை சத்து,மணி சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை உண்மையிலேயே தேவையான அளவு மட்டும் அளிப்பதில்லை. இதன் விளைவாக இடு பொருட்களின் செலவு அதிகரிப்பதுடன், அந்த செலவுக்கு ஏற்றால் போல் லாபம் கிடைப்பதில்லை. நாம் மேற் சொன்ன மூன்று சத்துக்களை பற்றி மட்டும் நினைக்கிறோம். ஆனால் பயிருக்கு தேவையான முக்கிய சத்துக்கள் 12 உள்ளன.

இப்பதிவில் அவை என்னென்ன சத்துக்கள் என்றும் அவை பயிருக்கு ஆற்றும் உதவி பற்றியும் காண்போம்.

முதன்மை சத்துக்கள்

தழை சத்து(Nitrogen), மணி சத்து(Phosporus), சாம்பல் சத்து(potassium)

சிறிது முக்கியமான சத்துக்கள்

கால்சியம் (Calcium),மெக்னீசியம் (magnisium) ,சல்பர் (sulfur)

குறைவான அளவு தேவைபடுபவை(Micro Nutrient)

இரும்பு சத்து(Fe),மாங்கனீசு(Mn),துத்தநாகம்(Zn),போரான்(B), காப்பர்(Cu).

தற்போது இந்த சத்துக்கள் பயிரின் வளர்ச்சிக்கு ஆற்றும் முக்கிய பங்கினை பார்ப்போம்

சத்துக்கள்ஆற்றும் பணி
முதன்மை சத்துக்கள்
தழை சத்து
இலை,தழைகளின் வளர்ச்சிக்கு
மணி சத்து வேரின் வளர்ச்சி
சாம்பல் சத்து விளை பொருட்களின் தரத்தை நிர்ணயிப்பது மற்றும் இலையில் உற்பத்தி செய்யபடும் சத்தை பயிர்ன் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்வது
சிறிது முக்கியமான சத்துக்கள்
கால்சியம்பயிரின் செற்சுவர் மற்றும் செல்லை வலுவாக்குவது
மெக்னீசியம்பச்சயத்தில் உள்ள முக்கிய சத்து
சல்பர்பயிர் மற்றும் விளை பொருளின் நிறம் மற்றும் வாசனையை நிர்ணயிப்பது(உதாரணம்- பூண்டு)
குறைவான அளவு தேவைபடுபவை
போரான் பூவிலிருந்து காய் உருவாக்கத்திற்கு உதவுகிறது
துத்தநாகம்,
மாங்கனீசு,
இரும்பு,காப்பர்,
மாலிப்டீனம்
பல்வேறு என்சைம் மற்றும் வினை வேக மாற்றியாக செயல் பட்டு உயிர் வேதியல் வினைகளில் ஈடுபடுதல்


ஒவ்வொரு தனிபட்ட சத்துக்களும் ஒரு சில முக்கிய சேவைகளில் ஈடுபட்டாலும், அனைத்து சத்துக்களின் ஒன்றினைந்த சேவை தான் பயிரின் ஒட்டு மொத்த உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை நிர்ணயிக்கிறது. அனைத்து சத்துக்களும் தேவையான அளவு இருந்தாலும் ஒரு சத்தின் அளவு மண்ணில் குறைந்து இருந்தாலும் அது பயிரின் உற்பத்தியை பாதிக்க வாய்ப்புண்டு. எனவே தான் அனைத்து வகை சத்துக்களை பற்றியும், அவை பயிருக்கு ஆற்றும் சேவை பற்றியும், மண்ணிலிருந்து சத்துக்கள் எவ்வாறு பயிருக்கு கிடைக்கிறது என்பது பற்றியும் நாம் அறிவது மிகவும் அவசியம்.

இந்த சத்துக்கள் எந்த அளவு நம்முடைய வயலில் உள்ளது. எவ்வாறு அறிந்து கொள்வது. அதற்கு தான் நாம் மண் பரிசோதனை செய்வது அவசியம். மண் பரிசோதனையின் அவசியத்தையும் அதில் கணிக்கபடும் காரணிகளையும் பற்றி அடுத்த பதிவில் காணலாம்.

--

5 comments:

  1. பரிசோதனைக்காக மண்ணை எவ்வாறு தேர்வு செய்வது ?
    மண் பரிசோதனையை எங்கு செய்வது ?

    ReplyDelete
  2. இது எல்லா ஊர்/நாட்டு மண்ணுக்கும் பொருந்துமா ?

    மண் பரிசோதனையின் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி யூர்கன் க்ருகியர்.
    மண் பரிசோதனைக்கு எவ்வாறு மண்ணை தேர்வு செய்வது மற்றும் மண் மாதிரியை எப்படி எடுப்பது என்பது பற்றி அடுத்த பதிவில் ஒரிரு நாட்களில் பதிவிடுகிறேன்.
    மண் பரிசோதனையை அரசு மண் பரிசோதனை ஆய்வகங்கள் இலவசமாக செய்து கொடுக்கிறது. அதற்கு வேளாண் துறையை அனுகினால் அவர்கள் உதவி செய்வார்கள். தமிழகத்தில் இப்படிபட்ட ஆய்வகங்கள் பல இருக்கின்றன.
    ஆனால் அர்சு மண் ஆய்வகங்களில் சரியாக மண் பரிசோதனை செய்வதில்லை என்று குறைபாடு உள்ளது. ஒரு சில அரசு சாரா நிறுவனங்கள் இம்ம்ண் பரிசோதனையை அறிவியல் முறைபடி துள்ளியமாக செய்து கொடுக்கிறார்கள். ஆனால் அவர்க்ள் அதற்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். இது பற்றி ஒரு பதிவு இடபட்டுள்ளது

    http://marutam.blogspot.com/2009/05/naf.html.

    தேசிய வேளாண் நிறுவனத்தில் (பாரத ரத்னா சி.சுப்ரமணியம் அவர்களால் ஆரம்பிக்க பட்ட தொண்டு நிறுவனம்) இது போன்ற மண் பரிசோதனை செய்கிறார்கள்.

    இது சம்பந்தமாக வேறு உதவி தேவை பட்டால் கேளுங்கள். நான் முடிந்தவரை உதவி செய்கிறேன்

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி சதங்கா (Sathanga).இது எல்லா நாட்டு மண்ணுக்கும் பொருந்தும். அமெரிக்காவில் Mobile மண் பரிசோதனை களும் கிடைக்கிறது. இன்னும் ஒரிரு நாட்களில் அடுத்த பதிவிடுகிறேன்

    ReplyDelete
  5. அன்பு நண்பருக்கு வணக்கம்
    ரெம்ப ஆசைப்பட்டு ஒரு மாங்கொட்டை விதை போட்டு தொட்டிய்ல் வளர்த்து தற்போது நிலத்தில்
    உன்ரயுள்ளேன் .அனால் துளிர் விடுகிறது கிழே உள்ள மா இலைகள் கருகுகின்றன என்னை செயாட்டும் பதில் சொன்னால்
    மிக்க நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்