Monday, July 6, 2009

பண்ணை உபகரணங்கள் - 2 (இயந்திரக் களை எடுப்பான்)

தற்போதைய சூழ் நிலையில் விவசாயிகளுக்கு வேளாண் பணிகளை மேற்கொள்ளத் தேவையான பணியாட்கள் சரிவர கிடைப்பதில்லை. குறிப்பாக எல்லாப் பயிர்களிலும் களை நிர்வாகம் ஒரு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. எனவே நவீன தொழில் நுட்பங்களைப் பின் பற்றுவதில் சிறிது தொய்வு ஏற்படுகிறது. இதை நிவர்த்தி செய்யவே இயந்திரக் களைஎடுப்பான் கருவி கண்டுபிடிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.






இயந்திரக் களையெடுப்பானின் சிறப்பு அம்சங்கள் என்ன?

• இது மின் மோட்டார் கொண்டு இயக்கப்படுவதால் வேலையாட்களுக்கான பணிச்சுமை குறைகிறது.

• விவசாயிகளே இதனை இயக்க இயலும் என்பதால் வேலையாட்களைச் சார்ந்திருத்தல் தவிர்க்கப்படுகிறது.

• சரியான நேரத்தில் களை எடுக்கப் படுவதால் பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு அதிக மகசூல் எடுக்க இயலும்

ஒரு மணி நேரம் களை எடுக்க சுமார் 2 லிட்டர் பெட்ரோல் செலவு மட்டுமே.


--

3 comments:

  1. நல்ல விசயம் , விவசாயத்துக்க ஒரு பிளாகை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது

    ReplyDelete
  2. பாராட்டுக்கும் ஊக்க படுத்துதலுக்கும் மிக்க நன்றி மதி.

    ReplyDelete
  3. thanks for your service by thanjavur vivasayi

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்