வளர்த்தால் எப்படி இருக்கும்?.இந்த முயற்சியை தான் Topsy Turvy என்ற நிறுவனம் முயற்சி செய்து பார்த்து, அவ்வாறு வளர்ப்பதற்கு தேவையான தொட்டியையும் வடிவமைத்து அமெரிக்க சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
ஒரு செடி கீழிருந்து மேல் நோக்கி வளரும் போது அது நீர் மற்றும் மண்ணிலிருந்து உறிஞ்சும் சத்துக்களை புவு ஈர்ப்பு விசையை எதிர்த்து கீழேயிருந்து மேல் நோக்கி அனுப்ப வேண்டியுள்ளது. எனவே செடியை மேலிருந்து கீழ் நோக்கி வளர்க்கும் போது உணவு பொருளானது புவி ஈர்ப்பு விசையை நோக்கி கீழே பாய்ந்து காய் பகுதிகளை நோக்கி செல்வதால் விளைச்சல் அதிகம் இருக்கும் என்கிறது அந்த நிறுவனம்.அது மட்டுமன்றி செடி மேலே வளர்வதால் புழு மற்றும் நோய் பாதிப்பு பெருமளவு குறைகிறது என்கிறார்கள்.
நகர் புறங்களில் patio மற்றும் பால்கனிகளில் செடி வளர்ப்பதற்கு ஏற்ற அமைப்பு இது.
நான் இந்த செடி வளர்ப்பு தொட்டியை வீட்டில் வளர்த்து சோதனை செய்து பார்த்தேன். தக்காளி செடி நன்றாகவே வளர்கிறது. என் வீட்டு கொல்லை பகுதியில் வெயில் குறைவாக
கிடைப்பதால் இதன் உண்மையான விளைச்சளை என்னால் கணிக்க முடியவில்லை. ஆரம்ப காலங்களில் அடிக்கும் வேகமான காற்று இந்த செடியின் தண்டினை முறிக்க வாய்ப்பு
உள்ளது.நான் வளர்த்த போது ஒரு செடியின் தண்டு சிறிது முறிந்தாலும் அது தொடர்ந்து வளர்ந்து, அந்த கிளைகளில் காய்களையும் வைத்தது.
அமெரிக்காவில் நிறைய பேர் பால் கேனை மேலே கட்டி தொங்கவிட்டு இது போன்றே தக்காளி வளர்த்து முயற்சி செய்துள்ளனர்.
இது போன்ற மாதிரிகளை உருவாக்குவதும் மிக எளிது. உர சாக்கு பையை கிழித்து வட்ட வடிவில் தைத்து இதே போன்ற planterகளை எளிதாக நாமே உருவாக்களாம்.இதே முறையில் நிறய செடிகளை வளர்க்கவும் புதிய வகை மாதிரிகளை எளிதில் உருவாக்களா.இந்தியாவில் இது போல் புதிய மாதிரிகளை வடிவமைத்து, உற்பத்தி செய்து விற்றால் உற்பத்தி செய்பவருக்கு பணமும் கிடைக்கும். மக்களும் வீட்டிலே காய்கறி வளர்க்க வாய்ப்பும் கிடைக்கும்.
முக்கியமாக கிராம புற சுய உதவி குழக்கள் மூலம் இதை உற்பத்தி செய்வதன் மூலம் கிராம புரத்தில் நிறைய பேருக்கு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் இது போல் யாராவது முயற்சிக்கிறார்களா என்று தெரியவில்லை.மற்ற பதிவுகளில் எழுதியது போல் blog-ல் புலம்புவதோது விட்டு விடாமல், இம்முறை Topsy Turvy Planterகளை அரசு சாரா சேவை நிறுவனம்,விவசாய கல்லூரி, விவசாய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தோட்டகலையில் விருப்பம் உள்ளவர்களுக்கென இந்தியாவில் பல பேருக்கு வாங்கி அனுப்பியுள்ளேன். அதில் ஒரு சிலராவது நல்ல முயற்சி செய்து பார்க்கிறார்களா? என்று பார்ப்போம்.
--
நல்ல தகவல்
ReplyDeleteநன்றி nis (Ravana)
ReplyDeletenalla muyarchi bhalan eppadiyo?
ReplyDelete//nalla muyarchi bhalan eppadiyo?
ReplyDelete//
வெயில் சரியாக இல்லாததால் அதன் உண்மையான விளைச்சளை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் 50லிருந்து 100 பழம் வரை இதுவரை காய்த்துள்ளது. இந்தியாவில் அதன் பலன் எப்படி இருக்கிறது என்று நான் வங்கி அனுப்பியவர்களிடமிருந்து பதில் வந்த உடன் நிச்சயம் பதிவிடுகிறேன்
நண்பரே, ஒரு சிறு சந்தேகம். "கூட்டு பண்ணை" என்பதன் ஆங்கில பதம் என்ன?சொல்ல முடியுமா? நான் விவசாயம் செய்ய ஆயத்தமாகும் மென்பொருள் வல்லுநர்.
ReplyDeleteவாங்க புலி
ReplyDelete"கூட்டு பண்ணை" என்பதன் ஆங்கில பதம் என்ன?சொல்ல முடியுமா?
Collective Farming or Cooperative Farming என்று சொல்லலாம்.
//நான் விவசாயம் செய்ய ஆயத்தமாகும் மென்பொருள் வல்லுநர். //
நல்ல முடிவு. வாழ்த்துக்கள். உங்களை போன்றவர்கள் தான் நிச்சயம் புதுமையான யுக்திகளை தயக்கமின்றி ஏற்று கொண்டு பரிசோதனை செய்து பார்ப்பார்கள்,
பதிவு எனக்கு உற்சாகம் தந்தது உண்மை. நீங்கள் எனது வலைப் பூவை பார்த்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. இதனை நான் செங்குத்தாக நிறுத்தி செய்து கொண்டிருக்கிறேன். முழுமையானவுடன் பதிவிடுகிறேன். படங்கள் அற்புதம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க வின்சென்ட். உங்கள் பதிவுகளை நான் எப்போதும் தொடர்ந்து படித்து வருகிறேன். உங்கள் முயற்சி மிகவும் நல்ல முயற்சி.
ReplyDeleteதக்களி வளர்ந்த பின் அதன் முடிவு எப்படி உள்ளது என்று கட்டாயம் தெரிய படுத்துங்கள். இது போன்ற மாதிரிகளை கிராம புற சுய உதவி குழுக்களை கொண்டு செய்து அதை நகரில் அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் பிறரிடம் விற்க வைத்து அனைவரையும் பயனடைய செய்ய வேண்டும் என்பது என் ஆசை.
வணக்கம்.
ReplyDeleteஉங்கள் பதிவுகள் இப்போது தான் எனக்கு அறிமுகம். .. தொடர்ந்து எழுதுங்கள். தகவல் புதுமையாகவும் உபயோகமானதாகவும் இருக்கிறது..நேரம் இருந்தால் என்னை அழைக்கவும்.
செந்தில்குமார்.
www.agri.co.nr
தங்களை தொடர்பு கொண்டு பேச தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி அளிக்கவும்..
ReplyDelete9-1500-22-55-7
வாங்க செந்தில் குமார் .என் மின்னஞ்சல் sathukapootham@yahoo.com.
ReplyDeleteதொங்கும் பூச்சட்டிகள் பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அது மாதிரிதான் இருக்கிறது.
ReplyDelete//ஒரு செடி கீழிருந்து மேல் நோக்கி வளரும் போது அது நீர் மற்றும் மண்ணிலிருந்து உறிஞ்சும் சத்துக்களை புவு ஈர்ப்பு விசையை எதிர்த்து கீழேயிருந்து மேல் நோக்கி அனுப்ப வேண்டியுள்ளது. எனவே செடியை மேலிருந்து கீழ் நோக்கி வளர்க்கும் போது உணவு பொருளானது புவி ஈர்ப்பு விசையை நோக்கி கீழே பாய்ந்து காய் பகுதிகளை நோக்கி செல்வதால் விளைச்சல் அதிகம் இருக்கும் என்கிறது அந்த நிறுவனம்.//
ReplyDeleteஎப்போதுமே கொஞ்சம் புதுமையான உத்திகளுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும். நீண்ட கால உபயோகத்தில் அவை நிலைத்து நின்றால்தான் அந்த உத்திகளைப் பயனுள்ளவை என்று கருத முடியும்.
வாங்க சார்.
ReplyDelete//எப்போதுமே கொஞ்சம் புதுமையான உத்திகளுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கும். நீண்ட கால உபயோகத்தில் அவை நிலைத்து நின்றால்தான் அந்த உத்திகளைப் பயனுள்ளவை என்று கருத முடியும்.//
நீங்கள் சொல்வது உண்மைதான். அனால் இது அமெரிக்காவில் 3 வருடமாக வெற்றிகரமாக இருக்கிறது. இது நகர் புரங்களில் அடுக்கு மாடி பாட்டியோக்களில் தக்காளி வளர்க்க நல்ல உத்தியாக எனக்கு தோன்றுகிறது.
தற்போது இயற்கை விவசாயம் மற்றும் நவீன விவசாயவுக்கு வந்து இருக்கிறொம் பற்றி பல அறிவியல் ரீதியாக இல்லாத தவறான கருத்துக்கள் பரப்ப பட்டு வருகிறது. அது பற்றி நடு நிலையாக உண்மையில் நவீன விவசாயம் என்றால் என்ன? அதன் கட்டாயம் என்ன? எந்த நிலையிலிருந்து இந்தியா இன்று உணவு தன்னிறைவுக்கு வந்திறது என்பது பற்றிய பதிவை நீங்கள் எழுதினால் மிகவும் நன்றாகவும் , பலருக்கு உண்மை போய் சேர உதவியாகவும் இருக்கும்.