வீட்டு தோட்டத்தில் வளர்க்க படும் ரோஜா செடியை அவ்வப்போது பூச்சி மற்றும் நோய் தாக்க வாய்ப்புண்டு. அவ்வாறு ஏற்படும் பூச்சி மற்றும் நோயை கட்டு படுத்த விவசாயிகளால் கண்டுபிடிக்க பட்ட எளிய முறை உள்ளது.10 கிராம் பெருங்காயத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளித்தால் அது பூச்சி/நோய் தாக்குதலை தடுப்பதுடன் அழகான மலரை மலர வைக்கவும் உதவும்.
--
உண்மையி்ல நீங்கள் செய்து பார்த்தீர்களா
ReplyDelete//உண்மையி்ல நீங்கள் செய்து பார்த்தீர்களா//
ReplyDeleteஇது மிகவும் நல்ல கேள்வி. பெரும்பாலும் இது போன்ற குறிப்புகள் தருபவர்கள் கேள்வி ஞானத்தில் மற்றும் அனுமானத்தில் எழுதுவார்கள். இந்த பதிவில் அது போன்ற செய்திகளை தவிர்க்க முயற்சி செய்கிறோம்.
இந்த பதிவில் பெரும்பாலும் வேளாண் கல்லூரி/ஆய்வு கூடத்தில்/மாதிரி பண்ணைகளில் "உண்மையாக " பரிசோதித்து பார்த்த தொழில் நுட்பங்கள் அல்லது மிகவும் நன்கு அறிமுகம் ஆன முன்னோடி விவசாயிகள் தங்கள் நிலத்தில் பரிசோதித்து பார்த்து பயன் படுத்தும் தொழில் நுட்பங்கள் அல்லது நன்கு அறிமுகமான கள பணியாளர்கள் நேரில் பார்த்து திருப்தி அடைந்த தொழில் நுட்பங்கள் போன்றவற்றை மட்டும் கொடுக்க முயற்சி செய்கிறோம்.
ரோஜா செடி பற்றிய இத்தொழில் நுட்பம் ஈரோட்டை சேர்ந்த ஒரு முன்னோடி விவசாயி தற்போது வெற்றிகரமாக பயன் படுத்தும் யுக்தி. பப்பாளி பற்றிய செய்தி நானே அனுபவத்தில் பரிசோதித்து பார்த்த ஒன்று .
நீங்களும் அதை முயற்சி செய்தீர்களானால், அதன் முடிவை பின்னூட்டமாக இட்டால் வாசகர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
எனக்கு ஒருவர் சவுக்கார மென் கரைசல் தெளிக்குப் படி கூறி செய்தேன். பயனளித்தது.
ReplyDeleteஉங்கள் வோட் வெரிபிகேசனை அகற்றிவிடவும்.
நன்றி யோகன் பாரிஸ்.வோட் வெரிபிகேசனை எடுத்துவிட்டேன்
ReplyDelete//எனக்கு ஒருவர் சவுக்கார மென் கரைசல் தெளிக்குப் படி கூறி செய்தேன்.//
தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி. வாசகர்கள் இதை படித்து பயனடைவார்கள்
thanks for the simple and easy tip.
ReplyDeleteகருத்துக்கு நன்றி சதங்கா
ReplyDeletei will try and reply; Suresh
ReplyDeleteரோஜா செடி ஒட்டு கட்டுவது எப்படி ?
ReplyDelete