Saturday, February 21, 2009

அறுவடையின் போது மழையில் நனைந்த நெல்லை காப்பது எப்படி?

குறுவை நெல் அறுவடையின் போது பெய்யும் மழையால் விவசாயிகள் அடையும் துயர் சொல்லி மாளாது.மிகுந்த உழைப்பு மற்றும் பொருட்செலவிற்கு பின் செழுமையான பயிரை வளர்த்து அதை அறுவடை செய்யும் நேரத்தில் வரும் மழையால் ஒட்டு மொத்த பயிரும் வீணாக போகும் வாய்ப்புண்டு. அப்போது பெய்யும் மழையின் விளைவாக நெல்லின் நீர் பிடிப்பு அதிகமாகி பூஞ்சானம் வளர்ச்சி,அஃபுலோடாக்சின்(aflotoxin),கெட்ட வாடை வருதல்,முளை விடுதல், நிறம் மாறுதல்,எடை குறைவு போன்ற எடை மற்றும் தர குறைவு ஏற்படும். மேலும் விவசாயிகளும் நெல்லை சிறிது நாட்களுக்கு சேமித்து வைத்து விலை அதிகமாகி விற்கவும் முடியாமல் செய்து விடும் .

இதை எவ்வாறு கட்டு படுத்துவது?

100 கிலோ பாதிக்க பட்ட நெல்லில் 10 கிலோ உமி/தவிடு(ஹல்லர் பிரான் அல்லது ஹஸ்க்) மற்றும் 5 கிலோ உப்பு சேர்த்து குவியலாக்கி 8- 10 நாட்கள் வைக்கவும். அவ்வாறு வைத்திருக்கும் போது என்றாவது வெயில் அடித்தால், வெயிலில் காய வைக்கவும். அவ்வாறு பதபடுத்த பட்ட நெல்லை ஆஸ்பிரேட்டரில்(அனைத்து அரிசி மில்லிலும் (காத்து பேட்டை) இது இருக்கும்) விட்டு உமி மற்றும் தவிடை பிரித்து விட வேண்டும். அந்த உமி/தவிட்டை கால்நடைகளும் விரும்பி உண்ணும்.

இவ்வாறு செய்வதனால் நெல்லின் நீர் பிடிப்பு 28%லிருந்து 15% ஆக ஒரே நாளில் குறைந்து விடுகிறது. இதற்கு ஆகும் செலவும் மிக குறைவே(Rs40).இது சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்காத தொழில் நுட்பம் ஆகும்.இதை ஆய்வு முறையில் நாங்கள் செய்து பார்த்து பயனையும் உணர்ந்துள்ளோம். நெல்லில் சேமிப்பு மற்றும் அறுவடைக்கு பிந்தய தொழில் நுட்பம் பற்றி நடைமுறை அனுபவம் பெற விரும்பினால் உங்களது மின்னஞ்ஞலை தெரிவித்தால் உங்களுக்கு contact information தர தயாராக உள்ளோம்.

--

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்