Sunday, February 15, 2009

மாமரத்தில் விளைச்சலை அதிகரிக்க

மா மரத்தில் அதிக பூ வைத்து விளைச்சலை அதிகரிக்க ஒரு தொழில் நுட்பத்தை பார்ப்போம். இத்தொழில் நுட்பம் தமிழகத்தை சேர்ந்த தர்மபுரி மற்றும் கிருஷ்னகிரியில் விவசாயிகளால் பின் பற்ற பட்டு லாபத்தை பெருக்க உதவி வருகிறது. இத்தொழில் நுட்பத்திற்கு மட் கா காட் என்று பெயர்.எருமை மாட்டிலிருந்து பெற பட்ட பாலிலிருந்து தயாரிக்க பட்ட மோர் 15 லிட்டர் எடுத்து கொண்டு அதனுடன் 15 லிட்டர் தண்ணீரை நன்கு கலக்க வேண்டும்.அதை மண் பானையில் ஊற்றி பானையின் மேல் பகுதியை துணியால் மூடி நிழல் பகுதியில் வைக்க வேண்டும் அல்லது மண்ணுக்கு அடியில் புதைத்து 21 நாட்கள் வைக்க வேண்டும்.அவ்வாறு வைப்பதால் நுண்ணுயிர் நொதித்தலால் பல நல்ல உயிர் ஊக்கி(bioactive molecule) பொருட்கள் உருவாகும்.1 லிட்டர் இந்த கலவையுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிப்பதனால் மா மரத்தில் பூக்கள் அதிகரித்து விளைச்சளும் அதிகரிக்கிறது.

--

8 comments:

  1. எங்க வீட்டு தோட்டத்தில் மா கன்று வைத்து 5 வருடம் ஆகிவிட்டது இன்னும் பூக்கவொ

    காய்கவோ இல்லை .என்ன செய்ய?

    ReplyDelete
  2. //Good Initiative...
    //

    ஊக்குவித்தலுக்கு நன்றி லக்ஷ்மணன் அவர்களே

    ReplyDelete
  3. //எங்க வீட்டு தோட்டத்தில் மா கன்று வைத்து 5 வருடம் ஆகிவிட்டது இன்னும் பூக்கவொ

    காய்கவோ இல்லை .என்ன செய்ய?//

    வருகைக்கு நன்றி மலர் அவர்களே.இனி வரும் பதிவில் அது பற்றி விரிவாக விளக்குகிறேன்.

    ReplyDelete
  4. மலர், நீங்கள் மாமரம் வைத்திருக்கும் மண் வகை என்ன? உங்கள் பகுதியின் தட்ப வெட்ப சூழ்நிலை என்ன? முக்கியமாக எந்த variety மாமரம் வைத்திரிக்கிறீர்கள்?பொதுவாக நுண்தாது(micronutrient) சத்துக்கள் குறைவால் மாமரம் காய்ப்பு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.இந்த வகை நுண்தாது பொருள் குறைவுக்கு 50 கிராம் micronutrient கலவையை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து(1 மரத்துக்கு), அதனுடன் 6ml வளர்ச்சி ஊக்கி(growth regulator) கரைசலை கலந்து 45 நாட்கள் இடைவெளியில் 2- 3 முறை தெளியுங்கள்.அவ்வாறு தெளிக்கும் போது மண்ணில் ஈரபதம் இருப்பது அவசியம்.You can get mango micronutrient mix and growth regulator in fertilizer shop

    ReplyDelete
  5. அன்பார்ந்த சதுக்க பூதம் அவர்களே வணக்கம்
    உங்கள் தமிழாக்கம் மற்றும் மொழியாக்கம் அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது . இந்த வலைத்தளம் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் நீடித்து நில்லைக்கவும் எனது மனம்கனிந்த வாழ்த்துகள் .
    இப்படிக்கு
    அன்புடன் குறிஞ்சிபாடியார்

    ReplyDelete
  6. வாழ்த்துக்கு நன்றி குறிஞ்சிபாடியார் அவர்களே

    ReplyDelete
  7. வணக்கம், எங்கள் வீட்டில் உள்ள மாமரம் கடந்த 2 வருடங்களாக காய்கின்றது. ஆனால் கயாகவோ அல்லது பழத்தையோ வெட்டும்
    போது அதற்குள் நிறைய கரும் புள்ளிகள் இருகின்றன இதை எவ்வாறு இல்லாதொழிப்பது. மேலதிக விளக்கம் தேவைப்படின் படங்களும் இணைக்க முடியும்.
    நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்