Saturday, December 12, 2009

ஒரு விவசாயியின் வெற்றிக்கதை

இது திருவள்ளுர் மாவட்டம் தேர்வாய் என்னும் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்னும் விவசாயியின் வெற்றிக்கதை:



இவருக்கு மொத்தம் 3.5 ஏக்கர் நிலம் உள்ளது. நெல், கடலை போன்றவையே பிரதான விவசாயம். இவருக்கு உள்ள நிலத்தில் சுமார் 85 செண்ட் நிலப்பரப்பு இவருடைய கணிப்புப்படி ஒன்றுக்கும் உதவாததாக கருதப்பட்டு நீண்ட நாட்களாக தரிசாகவே விடப்பட்டிருந்தது. அந்த நிலத்தைச் செம்மை செய்ய இயலும் என்று தேசிய வேளாண் நிறுவனத்தைச் சேர்ந்த வேளாண் அலுவலர்கள் மண் பரிசோதனை மூலம் கண்டறிந்து அவரிடம் சில பயிர்களைப் பரிந்துரைத்தனர். அதில் ஒன்று தான் ரோஜா மலர் சாகுபடி. அந்த நிலத்தில் அவரும் ரோஜாவை சாகுபடி செய்து நம்பிக்கையுடன் உழைத்தார்.



விளைவு, தற்போது வருடத்திற்கு நிகர லாபமாக ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார். தன் மகளின் திருமணத்திற்காக விற்ற ஒரு நிலத்தையும் அவர் மீண்டும் வாங்கியுள்ளார். இது ஒரு பாராட்டப்பட வேண்டிய success story அல்லவா? இதற்காக இவர் தன் குடும்பத்துடன் விடிகாலை 2 மணி முதல் உழைக்கிறார். விஞ்ஞான முறையில் தெளிந்து உழைத்தால் கை மேல் பலன் என்பதற்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இவரை நாம் பாராட்டலாம் அல்லவா?

--

3 comments:

  1. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..எனக்கும் விவசாயம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் உள்ளது.

    ReplyDelete
  2. இது ஒரு பாராட்டப்பட வேண்டிய success story அல்லவா? நிச்சயமாய்...

    ReplyDelete
  3. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்