Sunday, November 29, 2009

எங்கே செல்கிறது இந்திய விவசாயம்? -3

இந்திய விவசாயத்தின் இன்றைய நிலையை மிகத்தெளிவாக குறிஞ்சிப்பாடியார் அவர்கள் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்தப்போக்கு இப்படியே தொடர்ந்தால் நமது நிலை என்ன ஆவது? இதற்கு நாம் அரசாங்கத்தையே குறை கூறிக்கொண்டிருக்கலாமா? மற்றவர்களுக்கு இதில் பங்கு இல்லையா?

இந்திய விவசாயத்தில் மாற்றம் ஏற்பட பலருடைய பங்களிப்பு தேவைப்படுகிறது.

முதலில் முக்கியமாக அரசாங்கத்தின் பங்கு உள்ளது. அரசாங்கத்தில் முக்கிய முடிவெடுக்க வேண்டிய அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து விவசாயிகளை விட ஆழமான அறிவு உள்ளது. அவர்களது முன்னுரிமை வேறு. அதற்கு அரசியல் காரணங்கள் உள்ளன.

இரண்டாவதாக, இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் பங்கு. அரசாங்கம் முக்கிய முடிவுகள் எடுக்க இந்நிறுவனத்தின் ஆலோசனைகளை பெரிதும் சார்ந்துள்ளது. இவர்கள் ஆராய்ச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வேளாண் விரிவாக்கத்துக்கு அளிப்பதில்லை. உதாரணமாக, வீரிய ஒட்டு விதைகள். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வீரிய ஒட்டு விதைகளில் எத்தனை ரகங்கள் விவசாயிகளை சென்றடைந்துள்ளன? சமீபத்தில் வெளியிடப்பட்ட ரகங்களின் பெர்ஃபார்மன்ஸ் என்ன? நாம் ஏன் இன்னும் 30 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட ரகங்களை இன்னும் பயிரிட்டுக்கொண்டிருக்கிறோம்? இவ்வளவுக்குப்பின் புதிய ஆராய்ச்சியின் மூலம் நாம் சாதிக்கப்போவது என்ன? அதற்கான முதலீட்டினால் என்ன பயன் விளையப்போகிறது? மேலும் நவீன ரகங்கள் அதன் முழுத்திறமையை வெளிப்படுத்த தேவையான வளர்ச்சி சூழ்நிலைகளை உருவாக்கித்தர வேண்டாமா? ஆராய்ச்சி நிலையங்களுக்கும் அரசாங்க வேளாண் டிபார்ட்மண்ட்க்கும் உள்ள தொடர்பு மிகவும் பலவீனமாக உள்ள நிலையில் இவர்களை யார் ஒருங்கிணைக்கப்போகிறார்கள்? விவசாயம் ஸ்டேட் சப்ஜெக்ட் அல்லது செண்ரல் சப்ஜெக்ட் என்று எவ்வளவு நாள் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளப்போகிறோம்? விவசாய முன்னேற்றத்திற்கு ஸ்டேட் சப்ஜெக்டாக இருந்தால் என்ன செண்ரல் சப்ஜெக்டாக இருந்தால் என்ன? ஒரு தெளிவான கொள்கை வேண்டாமா? இதனை அரசுக்கு எடுத்துக்கூறி வழிகாட்ட ஐ.சி.ஏ.ஆர் முன் முயற்சி மேற்கொள்ள வேண்டாமா?

இதன் தொடர்ச்சியை பிறிதொரு பதிவில் இடுகிறேன்?

இது பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

--

2 comments:

  1. அப்பாவிNovember 29, 2009 at 10:26 AM

    //வீரிய ஒட்டு விதைகள்//

    வேளாண் ஆராய்ச்சி நிறுவனக்கள் கண்டுபிடிப்பதாக கூறும் வீரிய ஒட்டு ரகங்கள் உண்மையிலேயே விவசாயிகள் நிலத்தில் அவர்கள் கூறுவதாக கூறும் விளைச்ச்ளை தருகிறது என்று நம்புகிறீர்களா?

    ReplyDelete
  2. ஆராய்ச்சி நிலையங்களால் கண்டுபிடிக்கப்படும் வீரிய ஒட்டு ரகங்கள் ஓரளவுக்கு மேல் பலன் தராது. ஏனெனில், வீரிய ஒட்டு ரகங்களுக்கு ஒரு Genetic Potential உண்டு. ஆனால் அதை express செய்ய அதற்கு ஏற்ற வளர்ச்சி சூழ்நிலையை நாம் கொடுக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அதனை நாம் செய்யாததால் வீரிய ஒட்டு ரகங்கள் தேவையான பயன் அளிப்பதில்லை. உதாரணமாக, சரியான பருவநிலைத் தேர்வு, ஒருங்கிணைந்த ஊட்ட நிர்வாகம் (தேவைக்கேற்ற உரம்), சரியான நீர்ப்பாசனம் போன்றவற்றை அளித்தல் அவசியம். ஏனெனில், வீரிய ஒட்டு ரகங்கள் highly fertilizer and irrigation responsive.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்